எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “யானை டாக்டர்” என்ற ஒரு சிறுகதையை நேற்றுப் படித்தேன். 35 பக்கங்களுக்கு மேல் போகும் இந்தக் கதை, 2011இல் அவரது வலைப்பதிவில் எழுதப்பட்டது. முழுவதும் அங்கேயே கிடைக்கிறது. என் பையன் பல மாதங்களுக்கு முன் படித்துவிட்டு எனக்கு லிங்க் அனுப்பிருந்தான், நேற்று தான் படித்தேன், ரசித்தேன்.

டாப்ஸ்லிப்பில் இருக்கும் யானைகளைக் குணப்படுத்தும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பற்றி, அவரை அருகிலிருந்து பார்க்கும் வனத்துறைக்குப் புதிதாக வந்த ஒரு இளம் அதிகாரியின் பார்வையில் எழுதப்பட்டது. ஆவணப்படம் போன்ற ஒரு கதை. சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை. யானைகளைப் பற்றியும் காட்டைப் பற்றியும் சில விசயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

படித்துப் பாருங்கள், பிடிக்கும் என நினைத்துப் பகிர்கிறேன்.

Chapter 1, Chapter 2 and Chapter 3.

//காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும் கிராமங்கள் மீதும் பரவிமூடிவிட்டிருக்கும்
….
’யானைடாக்டர்’ என்ற பேரை நான் அப்போதுதான் கேள்விப்பட்டேன். நான் நினைத்தது டாப்ஸ்லிப்பின் யானைமுகாமுக்கு அரசால் நியமிக்கப்பட்ட வழக்கமான ஒரு மிருகடாக்டர் என்றுதான் அதற்குப் பொருள் என்று. //

Categorized in:

Tagged in: