Book Review,  தமிழ்

Dubliners by James Joyce in Tamil

100 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜேம்ஸ் ஜாய்ஸ்’ (James Joyce) என்ற பிரபல அயர்லாந்து எழுத்தாளர் எழுதிய புத்தகம் Dubliners [Available for free at Project Gutenberg). இதை தமிழினி பதிப்பகம், “டப்ளின் நகரத்தார்” என்று வெளியிட்டிருக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தது திரு க.ரத்னம் அவர்கள்.

இந்தப் புத்தகத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ நீங்கள் படித்திருக்கிறீர்களா?

நேற்று நான் படிக்க ஆரம்பித்தேன், சில பக்கங்களை தாண்ட முடியவில்லை, ஏனோ மொழிநடை சரளமாக செல்லவில்லை, ஒவ்வொரு பத்தியையும் இரண்டு, மூன்று முறை படித்தால்தான் புரிகிறது. இது மொழிபெயர்ப்பு பிரச்சனையா?, அல்லது ஆங்கில மூலமே இப்படிதான் சிக்கலாக செல்லுமா?, தெரியவில்லை.

டப்ளின் நகரத்தார் - திரு க.ரத்னம் - பக்கம் 1
டப்ளின் நகரத்தார் – திரு க.ரத்னம் – பக்கம் 1
டப்ளின் நகரத்தார் - திரு க.ரத்னம் - பக்கம் 2 & 3
டப்ளின் நகரத்தார் – திரு க.ரத்னம் – பக்கம் 2 & 3

ஒன்றிரண்டு பக்கங்களை இதோடு இணைத்து இருக்கிறேன், எனக்கு தான் புரியவில்லையா? உங்கள் கருத்து என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.