நண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) . சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும் திரு கந்தசாமிப் பிள்ளை, ஒரு நாள் சென்னை ‘பிராட்வே’ அருகே நின்றுக்கொண்டு சிக்கனமாக எப்படி திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் வந்து அவரிடம் வழி கேட்கிறார், பிறகு இருவரும் சென்று அருகில் காபி அருந்துகிறார்கள், அப்போது அந்த வயதானவர் தான் கடவுள் எனக் கூற, எந்தொரு ஆச்சாயமும் இல்லாமல் கந்தசாமி அவரிடம் நட்பாகப் பழகுகிறார். பொதுவாக கடவுள் நம் முன் தோன்றும் கதைகளில், அவர் உடனேயே ஒரு வரம் கொடுப்பார், வரம்பெற்ற மனிதரின் வாழ்க்கையும்…
“நாரத ராமாயணம்” என்ற இந்நூல் 1955இல் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது (2020) அமேசான் கிண்டில் பதிப்பாக வந்திருக்கிறது. இது ஒரு பகடி நூல் என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும். இராமாயணம் ஒவ்வொரு பிரதேசத்திலும், மொழியிலும் பல்வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது, அவற்றில் நான் படித்த சில: திரு.பழ.கருப்பையா…
100 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜேம்ஸ் ஜாய்ஸ்’ (James Joyce) என்ற பிரபல அயர்லாந்து எழுத்தாளர் எழுதிய புத்தகம் Dubliners [Available for free at Project Gutenberg). இதை தமிழினி பதிப்பகம், “டப்ளின் நகரத்தார்” என்று வெளியிட்டிருக்கிறார்கள், தமிழில் மொழி பெயர்த்தது திரு க.ரத்னம் அவர்கள். இந்தப் புத்தகத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ நீங்கள் படித்திருக்கிறீர்களா? நேற்று நான் படிக்க ஆரம்பித்தேன், சில பக்கங்களை தாண்ட முடியவில்லை, ஏனோ மொழிநடை சரளமாக செல்லவில்லை, ஒவ்வொரு பத்தியையும் இரண்டு, மூன்று முறை படித்தால்தான் புரிகிறது. இது மொழிபெயர்ப்பு பிரச்சனையா?, அல்லது ஆங்கில மூலமே இப்படிதான் சிக்கலாக செல்லுமா?, தெரியவில்லை. ஒன்றிரண்டு பக்கங்களை இதோடு இணைத்து இருக்கிறேன், எனக்கு தான் புரியவில்லையா? உங்கள் கருத்து என்ன?