இன்றைய (20 ஜூலை 2022) மெட்ராஸ் பேப்பர் இதழில் “பாட்டிகளுக்கு ஜீன்ஸ் மாட்டுங்கள்!” என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. இதற்கு முன் வந்தக் கட்டுரை “செல்போனுக்குக் கல்யாணம் செய்து வைப்பது எப்படி?“.

நண்பர்கள் கட்டுரையைப் படித்து விட்டு தங்களது கருத்துக்களைப் பகிரவும். நன்றி. முழுக் கட்டுரையும், இதழில் உள்ள மற்ற பல நல்ல கட்டுரைகளையும் படிக்க சந்தா தேவை, தமிழ் பத்திரிகை உலகில் தரமான எழுத்தியல் வளர உங்கள் சந்தாவும், ஆதரவும் பயனாகவிருக்கும்.

முதல் சில பத்திகள் கீழே:

நண்பர் ஒருவரது தாத்தா, ஐம்பதுகளில் வெளியான ஒரு தமிழ் மாத இதழின் பதிப்பாளராக இருந்திருக்கிறார். இப்போது அவரது தாத்தாவும் இல்லை; அந்தப் பத்திரிகையும் இல்லை. நண்பர் தன் சொந்த ஆர்வத்தில் அந்தப் பத்திரிகையின் சில பழைய பிரதிகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். படித்துப் பார்த்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. அந்தப் பத்திரிகை நின்றிருக்கக் கூடாது என்று தோன்றியது. கதைகளும் கட்டுரைகளும் அவ்வளவு நன்றாக இருந்தன.

நண்பருக்கும் அந்த வருத்தம் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? ஒன்று வேண்டுமானால் செய்யலாம். அந்தப் பழைய பத்திரிகைப் பிரதிகளை ஸ்கேன் செய்து இணையத்தில் போட்டு வைக்கலாம். ஆனால் செலவு அதிகமாகுமே என்று கவலைப்பட்டார். தவிர அவருக்கு அதெல்லாம் செய்யவும் வராது என்று சொன்னார்.

‘அவசியமே இல்லை. இவற்றை உங்கள் கைப்பேசியில் கிடைக்கும் இலவசச் செயலிகளைக் கொண்டே ஸ்கேன் செய்து பி.டி.எப் கோப்புகளாக்கி வைக்கலாம்’ என்றவுடன் குஷியாகிவிட்டார்.

என் நண்பரை விடுங்கள். ஒவ்வொருவரிடமும் இத்தகைய அரிய பொக்கிஷங்கள் சில இருக்கும். பழைய புத்தகங்கள், பத்திரிகைகள், கடிதங்கள் கொள்ளுப்பாட்டி கையால் எழுதி வைத்த சமையல் குறிப்புகள் இப்படி. எல்லாம் பழுப்பேறிப் பாழாய்ப் போய்க்கொண்டிருக்கும். இவற்றை மின்-கோப்புகளாக மாற்றி பத்திரப்படுத்தல் அவசியம். முன்பு அதற்கெல்லாம் வழி இல்லை; வசதி இல்லை. இன்று எல்லாமே இருக்கும்போது எதற்கு வீணடிக்க வேண்டும்?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் தாத்தா உவே சாமிநாத ஐயர் செய்த தொண்டின் தொடர்ச்சியாகவே இந்தப் பணி இருக்கும்.

இதைச் செய்வதற்கு எதற்கு சிறப்புச் செயலி? மொபைல் போனில் உள்ள கேமராவைப் பயன்படுத்திப் புகைப்படமாக எடுத்துக் கொண்டே போய் விடலாமே என்று தோன்றலாம். சாதாரண காமெரா செயலியில் படம் எடுத்தால் ஒவ்வொரு பக்கமும் கோணல் கோணலாக, கலைந்து, தனித் தனிக் கோப்பாக வரும். நூறு பக்கப் புத்தகமென்றால் நூறு படம் வரும். அதைப் பகிர, சேமிக்கச் சிரமமாகும். இங்கே நாம் பார்க்கப் போகும் முறையில் அதெல்லாம் தானாகவே சரி செய்யப்பட்டிருக்கும்.

தொடர்ந்துப் படிக்க..

#madraspaper #smartphone

Categorized in:

Tagged in:

,