நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப் பிரித்துப் பார்த்து தேதியை நினைவில் வைக்கச் சுணங்கி, “உங்களின் அழைப்பிதழ் கிடைத்தது. இருந்தாலும் அந்தத் தேதியையும், முகவரியையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பிடுங்களேன், வசதியாக இருக்கும்” என்று கேட்கிறார்கள்.

கான்வா:
வண்ணமயமாகப படத் துண்டு வெளியீடுகளை (ப்லையர்) வடிவமைக்கவே பிரத்தியேகமான ஒரு செயலி இருக்கிறது. கான்வா (Canva) என்று பெயர். இதன் இலவச நிலையைக் கொண்டே பல வகையான துண்டு வெளியீடுகளை நாம் உருவாக்கலாம்.

காணொளி (வீடியோ) எடிட்டர்:
இன்று எல்லோரும் யூ-ட்யூப்பில் தங்களின் பேச்சுக்களை, நிகழ்ச்சிகளை, நாட்டியங்களைப் பதிவேற்ற விரும்புகிறார்கள். எடுத்ததை அப்படியே வெளியிட்டால் நன்றாக இராது. அதை வெட்டி, ஒட்டி, தலைப்பிட்டு, இசையைச் சேர்த்து நேர்த்தியாக செய்ய வேண்டும். அதற்காகவே இருக்கிறது வீடியோ எடிட்டர் என்கிற செயிலிகள். இவற்றைப் பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

இதையெல்லாம் எப்படி செய்வது என்று இந்தக் கட்டுரையில் (26 அக்டோபர் 2022 மெட்ராஸ் பேப்பர்) பார்க்கலாம்.

#canvapro #madraspaper #TamilArticle #videoediting

Categorized in:

Tagged in:

,