இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் நுட்பங்களிலேயே சமீபத்தில் வந்த ஈனும் செயற்கை நுண்ணறிவுதான் (Generative AI) மனிதர்களைப் போலவே, சில சமயங்களில் அவர்களைவிட ஒரு விஷயத்தை இன்னும் சிறந்ததாகச் செய்யக்கூடிய திறன் வாய்ந்தது. சாட்-ஜி-பி-டி (ChatGPT) பயனர்களுக்கு வரப்பிரசாதம், அதேநேரம் இந்த நுட்பங்கள் கெட்டவர்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதால் சமூகத்திற்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் இவற்றால் மிகப் பெரிய தீங்குகளை இழைக்கக்கூடும். எத்தகைய தீங்குகள் வரத் தொடங்கியுள்ளன, அவற்றிலிருந்து ஓரளவுக்கு நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் இதழில் இருக்கும் எனது கட்டுரையில் பார்க்கலாம்.

சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற எம். ஐ. டி (MIT) பல்கலை. மற்றும் இஸ்ரேல் நாட்டின் நெகேவ் (University of the Negev) பல்கலை.கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும் சில யோசனைகளைத் தெரிந்து கொள்ளலாம். “லவ் டுடே” படத்தில் வரும் ஒரு காட்சியைப் பற்றியும் எழுதியுள்ளேன்! ஒரு வரியில் எம். ஜி. ஆர்க் கூட வருகிறார்!

அடிக்குறிப்பு: கடந்த ஓர் ஆண்டாக மெட்ராஸ் பேப்பரில் நான் எழுதிய கட்டுரைகளிலேயே இது தான் பெரியது (மைக்ரோசாப்ட் வேர்டில், 11 புள்ளியில் ஐந்து பக்கத்து மேல்!) என நினைக்கிறேன். அவ்வளவு விஷயங்களை நான் படித்து, தெரிந்து கொண்டு எழுத வேண்டியிருந்தது எனக்குப் திருப்தியைக் கொடுத்தது, படித்துவிட்டு உங்களின் கருத்தைப் பகிரவும். நன்றி!

மெட்ராஸ் பேப்பரை சந்தா செலுத்தி வாசியுங்கள். கட்டுரை இங்கே.

Categorized in: