• Chennai,  Lounge,  தமிழ்

  குடி குடியைக் கெடுக்கும்

  இது சமூக சீரழிவு. கலாச்சார சீரழிவு என்று சொல்லவில்லை, ஆனால் கண்டிப்பாகச் சமூக சீரழிவு. பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடு இல்லை, யாராக இருந்தாலும் அவர்களை மறந்து/அல்லது வேண்டும் என்றே குடித்துவிட்டு ரௌடியிசம் பண்ணுவது சமூக சீரழிவு தான். இந்த மாநிலத்தில் குடிக்கவில்லையா, அந்த நாட்டில் குடிக்கவில்லையா என்ற சண்டைக்கு வரவில்லை. இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து எந்த மாதிரியான ஓர் உலகத்தில் வாழுகிறோம் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்? 22 மார்ச் 2023 இந்து தமிழ் திசை நாளிதழில் வந்த செய்தி “திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே மது போதையில் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்ட பெண்கள். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே வாலாஜா சாலையில் மார்ச் 17-ம் தேதி நள்ளிரவு 6 இளம் பெண்கள் மது போதையில் அந்த வழியாகச் சென்ற நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த மாநகர அரசுப் பேருந்தின் முன்படுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அதோடு நின்றுவிடாமல் சரக்கு…

 • Coding,  Microsoft

  Seven years ago what I had dreamed is now Microsoft CoPilot

  Today, Microsoft unveiled the next lineup of their products to use the incredible, Large Language Model powered by OpenAI’s ChatGPT. Called Microsoft 365 Copilot, a similar tech has been in service in #github for nearly a year auto-generating software source code from simple prompts, this one does repetitive work for you automatically inside productivity apps like Microsoft Word, PowerPoint, Excel, Outlook & Teams. The demos were breathtaking. To me, having designed solutions in the early days of VBA with VBScripts, and later with Office API for SharePoint. From that lens, the engineering that would’ve gone into Microsoft Office Copilot to work looks unbelievable. I am curious to learn about the…

 • Articles

  மெட்டாவேர்ஸ்: சில குறிப்புகள்

  சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் .ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என்று மாற்றிக்கொண்டதிலிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு புதிய துறை மெய்நிகர் உலகம் (மெட்டாவேர்ஸ்) என்பது. விரைவில் இதே துறையினுள் ஆப்பிள் நிறுவனமும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை என்ன, எவ்வளவு தூரம் இவையெல்லாம் நடப்பில் சாத்தியம், இவற்றின் விலை என்ன என்பவற்றைப் பற்றிச் சிறிது பார்ப்போமா? இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள மூன்று முக்கிய தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம்: மதிப்புயர்த்திய மெய்ம்மை என்னும் ஆக்மென்டட் ரியாலிட்டி, சுருக்கமாக ஏ.ஆர். மெய்ந்நிகர் காட்சி என்னும் விரிச்சுவல் ரியாலிட்டி, சுருக்கமாக வி.ஆர். மெய்நிகர் வெளி என்னும் மெட்டாவேர்ஸ் இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (15 மார்ச் 2023) வந்துள்ள எனது கட்டுரையில் தொடர்ந்து படிக்கலாம்.

 • Chennai,  தமிழ்

  தவறாக மாட்டிக் கொண்டேன்!

  இன்றைக்குக் காலை மைலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் அருகே ஒரு துக்க நிகழ்விற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. பொதுவாக அந்தப் பகுதிக்கு காரில் செல்லக் கூடாது, நிறுத்த இடம் கிடைக்கவே கிடைக்காது என்பது பிறந்த குழந்தை உட்படச் சென்னைவாசிகள் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இப்போது மெட்ரோ பணிகள் வேறு, கேட்கவே வேண்டாம். காலை எட்டு மணி தானே, கடைகள் திறந்திருக்காது பார்க்கிங் கிடைக்கும் என நினைத்து காரை எடுத்துக் கொண்டு சென்றது என் முதல் தவறு. அங்கே கிழக்கு மாட வீதியில், பாரதிய வித்யா பவன் வாசலில் நிறுத்திவிடலாம் என்பது என் திட்டம். ஆனால் எனக்கு முன்பே பல நூறு வாகனங்கள் எப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்பது தெரியாமல் நான் போய் இடம் கிடைக்காமல் திண்டாடினேன். அதற்குள் என் அன்பு மனைவி “இதற்குத் தான் கார் வேண்டாம் என்று சொன்னேன்” என ஆரம்பிக்க, எனக்குப் பின்னால் வாகனங்கள் வந்து கொண்டேயிருக்க, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கோயிலை காரில் ஒரு சுற்றுச் சுற்றினால்…

 • Microsoft

  Murasu Anjal keyboard is now in Windows 11

  Rejoice! Murasu Anjal is now part of Microsoft Windows 11. After decades of waiting, Tamilians the world over can now use out-of-the-box the gold standard for Tamil language input in PC, the one-and-only Murasu Anjal in Windows 11. It is now an operating system feature. No need to install the app separately, just go to language settings, and add the keyboard. Please use it and share your feedback with Microsoft using the Feedback Hub app in Windows 11. It is currently available only for Windows 11, Version 10.0.22621.1344 and above. The Tamil99, the keyboard layout standard prescribed by the Government of Tamil Nadu has been available in Windows 10, from…

 • Chennai,  தமிழ்

  எனக்கு வந்த இந்த வருட காய்ச்சல்

  இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. முதலில் வறட்டு தொண்டை மற்றும் சோர்வு. நேற்று அது முன்னேறிக் காய்ச்சல், அதீத உடல் வலி, பயங்கரச் சோர்வு என ஆனது. மருத்துவரைப் பார்த்தேன், வழக்கமான மாத்திரைகள் எழுதிக் கொடுத்து நான்கைந்து நாட்களில் சரியாகிவிடும் என்றார். இன்று பரவாயில்லை. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் பரவும் தொற்றுகள், இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்வது புதிர். நான் புத்திசாலியாகத் தப்பித்துவிட்டேன் என நினைத்தேன் – மெட்ரோ, திரையரங்கு, கல்யாண மண்டபம், பல் பொருள் அங்காடிகள் எனக் கூட்டமான இடங்களில் எப்போதும் N95 மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன், சனிடைசர் பயன்படுத்துகிறேன், பெருந்தொற்று முடிந்தும் கூட. இருந்தும் இந்த வருட ஃப்ளூ என்னைப் பிடித்துவிட்டது. இரண்டு வாரம் முன்னர் என் பையன் கல்லூரியில் ஆண்டு விழா, அதிலிருந்து அவன் கொண்டு வந்ததாகத் தான் இது இருக்க வேண்டும். அவனுக்குப் போன வாரம் சளி, இருமல், வேறு எதுவும் தொந்தரவு இல்லை. அவனை உடனே தனிமைப் படுத்தியாயிற்று. அவனும் என்னைப் போல முகக்கவசம்…

 • Articles

  வித்தை காட்டும் கலை

  கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்பார்கள். அந்த மாதிரியான வசீகரப் பேச்சாளர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நாமெல்லாம் அவரை மாதிரி கருப்புநிறக் காட்சிகளை மட்டும் வைத்துக் கேட்பவரின் கவனத்தை ஈர்க்க முடியாது. நமக்குத் தேவை ஜொலிக்கும் விளக்கக் காட்சிகள், அதைச் செய்யச் சிறந்த செயலி இன்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் வரும் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் தான். தற்போது மைக்ரோசாப்ட் 365 என்கிற சந்தா மூலமாக வருவது நம் அப்பா காலத்து மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் கிடையாது. கடந்த சில ஆண்டுகளில் பல நூறு புது வசதிகள் இதில் வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் (8…

 • Movie Review

  Pallu Padama Paathuka (2023), disgusting & shabby

  Some of the finest movies have been made in the zombie genre and others feature Adolf Hitler, it is a shame that Pallu Padama Paathuka (2023) uses both this shabbily. I can’t believe that a fine actor like Attakathi Dinesh after giving films like Cuckoo (2014) and Visaranai (2016) decided to act on this trash (forgive me, there is no nice way of saying this). Gets a mangoidiots rotten rating.