உங்கள் விண்டோஸ் கணினியை (Windows 10 அல்லது 11) சிறப்பாக இயங்க வைப்பதற்கு PC மேனேஜர் என்கிற செயலியை மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தச் செயலி விண்டோஸின் தேவையான முக்கிய அமைப்புகளை ஒரே இடத்தில் காட்டி அவற்றை எளிதாகச் சரிசெய்ய உதவுகிறது. இங்கே கணினியின் வேகத்தை அதிகரிக்க, ஹார்ட் டிஸ்க் இடத்தை நிர்வகிக்க, தேவையில்லாத கோப்புகளைச் சுலபமாக நீக்க, இணைய உலாவி அமைப்புகளை நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ள, வலைப்பக்கங்களில் எதையும் படிக்கவிடாமல் நம்முன் வந்து நிற்கும் பாப்-அப்’களை (திடீர் என்று எழும்பும் திரைகள்) தடுத்தல் என்று பலவற்றை ஒரே சொடுக்கில் செய்ய முடியும். அதைத் தவிர இதில் வைரஸ் (தீச்செயலி) நீக்குதல், ஒலியை, திரையில் தெரியும் காட்சிகளை மற்றும் காணொலிகளைப் பதிவு செய்யும் வசதிக்கான இணைப்பு, கணினியில் பார்க்கும் எந்த வீடியோவாக இருந்தாலும் அதற்கான கிளோஸ் கேப்ஷன் (துணையுரை) கொடுப்பது, நாணய மதிப்பைக் காட்டும் வசதி, மொழிபெயர்ப்பு வசதி போன்ற பல பயனுள்ள அம்சங்கள் இருக்கிறது. இதைப் பயன்படுத்துவது எளிது, பயிற்சி எதுவும் தேவையில்லை.

மைக்ரோசாஃப்ட் தயாரிப்பு என்பதால் இது வீண்டோஸ்ஸை எந்தவிதத்திலும் கெடுக்காது. நல்லதே நடக்கும்!

PC Manager for Windows 11 - Free from Microsoft Store

PC Manager for Windows 11 – Free from Microsoft Store

PC Manager - Toolbox for Screenshot, Closed Captions, Currency Converter, Recorder and more

PC Manager – Toolbox for Screenshot, Closed Captions, Currency Converter, Recorder and more

“PC Manager” என்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் தேடவும், அல்லது “PC Manager Microsoft” என்று கூகுளில் தேடி மைக்ரோசாஃப்ட் டாட் காம் தளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கவும்.

Tagged in:

,