மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பது ஒருநாள் அது இல்லாமல் இருக்கும்போதுதான் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் எங்கள் வீட்டில் சில முறை ஒரு நாள் முழுதும் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவை எல்லாம் மழைக்காலத்தில் குளிரான சூழலில் நடந்ததால், பெரிய சிரமம் இல்லாமல் சமாளித்து விட்டோம். ஆனால் நேற்று இரவு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் ஒரு முழு இரவும் மின்சாரம் இல்லாமல் கழிக்க வேண்டியிருந்தது.

நேற்று இரவு ஒரு மணியிலிருந்து எங்கள் தெருவில் எந்த வீட்டிலும் மின்சாரம் இல்லை. தெருவில் தரையில் புதைக்கப்பட்டிருந்த மின் கம்பி எங்கோ துண்டிக்கப்பட்டிருந்தது. இன்று காலையிலிருந்து மதியம் இரண்டு மணி வரை, கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருந்தபோதும், மின்சாரத் துறை ஊழியர்கள் அந்த பிரச்சனையைச் சரிசெய்தனர் – அவர்களுக்கு நன்றி.

பல மணி நேரம் கழித்து ஏர் கண்டிஷனர் இயங்கி அறை குளிரானதும், என்ன ஒரு நிம்மதி! அப்போதுதான் அடுத்த வேலை செய்யத் தோன்றியது!

Categorized in:

Tagged in: