
Sri Hanuman Jayanthi 2019
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் வெகு விமர்சையாக எங்கள் பகுதியில் இருக்கும் இரண்டு கோயில்களில் நடக்கும்.
சென்னை அசோக் நகர், சாமியார் தோட்டம் தெருவில் இருக்கும் ஸ்ரீ கருமாரி திரிபுரஸூந்தரி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சம் வடைமாலை அலங்காரங்கள் தேர் வடிவத்தில் செய்து ஸ்ரீ ஆஞ்சனேயரைக் கொண்டாடுவார்கள்.

அதே போல, அருகில் ஐம்பத்து மூன்றாம் தெரு, அசோக் நகரில் இருக்கும் “ஆஞ்சநேயர் பக்த சபா” ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வெகு சிறப்பாக அலங்காரங்கள் செய்து இருப்பார்கள், பக்தர்கள் கூட்டம் இங்கே அலைமோதும்.


