புதுப் புத்தகத்தின் நறுமணம் ஏன் முக்கியம், மின்-நூல்கள் (இ-புக்) நிஜமாகவே விற்கிறதா, தமிழர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்களா , தமிழில் புத்தகங்கள் விற்பதே இல்லையா, தமிழ் எழுத்து சோறு போட என்ன செய்ய வேண்டும், இணையத்தில் வாசிப்பு எப்படி இருக்கிறது, தொழில்நுட்பத்தில் அடுத்து தமிழ் வாசிப்பு எங்கே செல்லப் போகிறது என்று பல விஷயங்களைத் தங்களின் நீண்ட அனுபவத்திலிருந்து பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டில் இரு பெரும் தமிழ் எழுத்தாளர்கள் தனித் தனியாகப் பேசினார்கள். இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டால், இன்றைய வருங்கால வாசிப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளலாம். .

ஒருவர் மென்பொருள் வல்லுநர், இன்னொருவர் தமிழில் சமூக வலைத்தளங்களின் மன்னன் மற்றும் புது எழுத்தாளர்களின் தொழிற்சாலை. இருவருமே கணினி காதலர்கள், தொழில்நுட்ப விசிறிகள், அதனால் எனக்கு நண்பர்கள். இருவருமே அவர்களின் இயல்பான பேச்சு நடையில் (சுவையில்) கலக்கிவிட்டார்கள், நுட்ப விளக்கங்களில் தரவுகளில் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள், நகைச்சுவைக்கும் குறைவில்லை. கேட்டவர்களைக் குறிப்பாக மாணவர்களைக் கட்டிப் போட்டுவிட்டார்கள்.

தமிழ் வாசகர்கள், பதிப்பாளர்கள், நூலகத் துறையில் இருப்பவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கட்டாயம் கேட்க வேண்டிய உரைகள், நான் நேரில் ரசித்து ரசித்துக் கேட்டேன்.

  1. திரு ராகவன் அவர்களின் “வாசிக்க மறுக்கிறதா தமிழ் சமூகம்” – YouTube link
  2. திரு என். சொக்கன் அவர்களின் “அச்சுக்கு அப்பால்” – YouTube link.
திரு ராகவன் "வாசிக்க மறுக்கிறதா தமிழ் சமூகம்", திரு என். சொக்கன் "அச்சுக்கு அப்பால்"

திரு ராகவன் “வாசிக்க மறுக்கிறதா தமிழ் சமூகம்”, திரு என். சொக்கன் “அச்சுக்கு அப்பால்”

Categorized in:

Tagged in: