• Faith

  Curtain raiser to Navarathri Golu 2021

  இரண்டு ஆண்டுகளாக நீண்ட நித்திரையிலிருந்து எங்கள் வீட்டில் இருக்கும் பொம்மைகள் இந்த வருட நவராத்திரி விழாவிற்காக வெளியில் வந்திருக்கிறன. வீட்டுப் பரணிலிருந்து, எல்லா அட்டைப் பெட்டிகளையும் கீழிறக்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து, வகைப்படுத்தி வைக்கும் வேலை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்குப் பிறகு கொலுப் படிக் கட்டி, அதற்குமேல் துணி போட்டு, அலங்காரம் செய்து பொம்மைகளை அடுக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்ய ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ஆகும் என்பது என் அம்மா மற்றும் மனைவியின் அனுபவக் கணிப்பு. என் வேலை வேடிக்கைப் பார்ப்பது! கொரோனா சூழ்நிலையில், பண்டிகையை இணையவழியில் தான் கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. போன வருடம் மிகச் சிறிய அளவிலான கொலு தான் வைத்தோம். இறைவன் அருளில் அடுத்த வருடத்திற்குள் பெருந்தொற்று உலகத்தை விட்டு முற்றிலும் போய், எல்லோரும் நலமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.

 • Faith

  Navarathri Golu 2020

  எங்கள் வீட்டில் வருடா வருடம் (2019, 2018), விமர்சையாக, இரண்டு அல்லது மூன்று கொலு அடுக்குகளில், பல படிகளாகக் கொலு வைப்போம். கொரோனா சூழ்நிலையால், என் அம்மாவும் அனுமதித்த காரணத்தால், இந்த ஆண்டு எளிதாக வைத்திருக்கிறோம். ஒரு வட்ட சாப்பிடும் மேசையில், மூன்று மரப் படிகளை வைத்து மிகச் சிறிய அளவிலான கொலு. நண்பர்களை, உற்றார், சுற்றத்தார்களை அழைக்கவில்லை. மன்னிக்கவும்! எங்கள் சகோதரிகளையும், என் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினர்கள் வந்தால் வரவேற்க எண்ணம். அதுவும் முகக்கவசம் கட்டாயம் எனச் சொல்லத் திட்டம். கடவுளின் அருளில் அடுத்த ஆண்டு உலக மக்கள் ஆரோக்யமாக, பயமின்றி வாழும் சூழ்நிலை திரும்பி வர வேண்டுகிறேன் – அப்போது நல்ல முறையில் கொலு வைத்து விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க எண்ணம்.

 • Events,  Faith,  VIP

  His Holiness Dalai Lama on Dr Kalam’s 89th Birthday

  I am blessed to have participated in a virtual program where His Holiness Dalai Lama addressed the students from around the world and the members of Dr APJ Abdul Kalam International Foundation on the event of the 89th Birthday celebrations of the former President of India. His Holiness spoke from his holy abode in Dharamshala, on the topic of “Liveable Planet Earth, Working Together for a Peaceful World”. The event was live broadcasted on YouTube in over fourteen languages. Below are from the notes I took from His Holiness speech. You can watch the full video above. Physical brain vs the sixth mind. Much attention is being by scientist and doctors…

 • Faith

  Sri Krishna Jayanthi 2020

  சாப்பாடு ஐட்டங்கள் அதிகம் கிடைப்பதால் எனக்குப் பிடித்த பண்டிகைகளில் முதலாவது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி / கோகுலாஷ்டமி: இரண்டுக்கும் வித்தியாசம் என்ன இங்கே பார்க்கலாம். ஆனால், இந்தக் கிருஷ்ண ஜயந்தி பண்டிகையில், அதுவும் வைணவர்களான (பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வழிபடுபவர்கள்) எங்களுக்கு எல்லா வருஷமும் குழப்பம் தான். எந்தத் தேதியில் கொண்டாடுவது என்று ஒவ்வொரு வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் / குடும்ப வாத்தியார்களுக்கும் / மரபுக்கும் / ஜோசியர்களுக்கு / ஸ்ரீ ஆச்சார்ய மடத்திற்கும் ஏனோ ஒத்துப் போவதேயில்லை. நேற்று முந்தினம் வரை எங்கள் வீட்டில் என்று என்பது முடிவாகவில்லை. கடைசி நாளில் மாறும் திருப்பங்களும் பல வருடங்களில் இருக்கும், இந்த வருடமும் இருந்தது. ஆனால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. போன மாதம் கோகுலாஷ்டமி வந்தப் போது ஸ்மார்த்த (சிவன் சம்பந்தமான வழிபாட்டைப் பிரதானமாகக் கொண்டவர்கள்) குடும்ப நண்பர் வீட்டிலிருந்து வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வெல்லம், கல்கண்டு வெண்ணெய், பழங்கள் வந்தது. நேற்று என் அக்கா விட்டிலிருந்து வந்தது. இன்று எங்கள் வீட்டில் செய்திருக்கிறோம்.…

 • Events,  Faith,  Lounge,  தமிழ்

  நாட்டார் தெய்வங்கள் – திருச்சி பார்த்தி

  நகரத்தில் (சென்னை) பிறந்து, இங்கேயே வளர்ந்து, சொந்த ஊரின் தொடர்புகள் இல்லாமல் இருக்கும் பலரைப் போன்றவன் நான், அதனால் தான் என்னவோ தமிழ் நாட்டில் முழுவதும் இருக்கும் எண்ணற்ற ஊர் தெய்வங்களை, காவல் தெய்வங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஐயனார், மதுரைவீரன், பாடிகார்ட் முனீஸ்வரர் போன்றவர்களை கேள்விப்பட்டதோடு சரி, அதற்கு மேல் தெரிந்ததெல்லாம் தமிழ் சினிமா மூலமாகத் தான், அதுவும் பல சமயங்களில் கதையின் போக்குக்காக இந்தத் தெய்வங்களை மேலோட்டமாகத் தான் காட்டியிருப்பார்கள். என் போன்ற கிராமத்து வாசமே இல்லாதவர்களுக்குப் பல சமயங்களில் இந்தத் தெய்வங்களைப் பார்த்தாலே ஒருவித பயமாகயிருக்கும் – யோசித்துப் பார்த்தால் அந்தப் பிம்பத்திற்குத் தமிழ் சினிமாவும், என் அறியாமையும் தான் காரணமாக தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தில் வழிபாட்டுக் கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது, பெருமாள் கோயிலுக்குத் தான் அதிகம் செல்வோம், அங்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்று என் தாத்தா லிப்கோ திரு சர்மாவை அவர்கள் ஒரு போதும் சொல்லியது கிடையாது. அப்படி பெருமாள் கோயில்களுக்குப் போகும் போதுக் கூட…