காலையிலிருந்து திருமாலை பற்றிய இந்த அழகான தமிழ்ப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடியவர்கள்: ப்ரியா சகோதரிகள். குறிப்பு: சில நாட்களுக்கு முன் ஒரு கோயில் விழாவில் முதல் முறையாக இந்தப் பாடலைக் கேட்டேன்!
நான் கேட்டு உள்ளீடு செய்த பாடல் வரிகள் கீழே, பிழையிருப்பேன் மன்னிக்கவும், சுட்டிக்காட்டினால் திருத்துகிறேன்.
பெருமாள் உன் திருநாமம் ஸ்ரீ சங்கு சக்கரமே இரு கண்ணில் தெரிக்கின்றதே நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியாது என் இதயம் குளிர்கின்றதே என் இதயம் குளிர்கின்றதே பெருமாள் உன் திருநாமம் ஸ்ரீ சங்கு சக்கரமே இரு கண்ணில் தெரிக்கின்றதே நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியாது என் இதயம் குளிர்கின்றதே ஆழ்வார்கள் வழி வந்து அழகான தமிழ் செய்து நான் உன்னைப் போற்றவில்லை ஆண்டாளின் மொழி போல இதமான கவி பாடி நின் நாமம் கூறவில்லை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்ரீ ஸ்ரீநிவாச உன் ஸ்ரீபாதம் எண்ணவில்லை நான் போகும் கதி என்ன, நீ வந்து துணையாக ஸ்ரீ ஸ்வாமி ஷேஷாசலாபெருமாள் உன் திருநாமம் ஸ்ரீ சங்கு சக்கரமே இரு கண்ணில் தெரிக்கின்றதே நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியாது என் இதயம் குளிர்கின்றதே ஸ்ரீ ஞான சத்குரு ராமானுஜர் செய்த சேவை நான் செய்யவில்லை ஆச்சாரியார் அண்ணமாசார்யார் போலப் புகழ் பாட வழியுமில்லை திருமலையில் திகழ்கின்ற பெருமாள் உன் தொண்டருக்கு நான் தொண்டு செய்யவில்லை நான் போகும் கதி என்ன, நீ வந்து துணையாக ஸ்ரீ ஸ்வாமி ஷேஷாசலா
Comments