இதோ வந்துவிட்டது ‘முதலாளி’ செல்பேசி விளையாட்டு. தரவிறக்க எதுவுமில்லை. நிறுவ எதுவுமில்லை. முற்றிலும் இலவசம்.
நாம் முன்பு விளையாடிய மோனோப்போலி (Monopoly) விளையாட்டை அடிப்படையாக வைத்து, நம் தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை வழங்குகிறது ‘முதலாளி’.
இன்று இதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், சில தடங்கல்களுக்குப் பிறகு கிளாடு ஃபேபிள் 5 (Anthropic Claude Fable 5) இயற்றறிவு மாதிரி சென்ற வாரம் மீண்டும் வெளியிடப்பட்டது. அதைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘முதலாளி’.
முதலாளி விளையாட்டின் சிறிய விளக்கம்:
🎲இருவர், மூவர், நால்வர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு இது. யாராவது ஒருவரின் செல்பேசியில் இதை இயக்கி எல்லோரும் சேர்ந்து விளையாடலாம்.
🎲மோனோப்போலி விளையாட்டைப் போலவேதான் இதுவும். இதில் தமிழ்நாட்டில் இருக்கும் பல நகரங்களை, ஊர்களை, இடங்களை விலை கொடுத்து வாங்கலாம், விற்கலாம், வாடகைக்கு விடலாம். எடுத்துக்காட்டாக, சென்னை மெரினா கடற்கரையை, பாண்டி பஜாரை, லஸ் கார்னரை உங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
🎲சிறுவயதிலேயே காசைக் கண்டபடி செலவழிக்காமல், வரவு-செலவுத் திட்டம் போட்டு முதலீடு செய்ய வேண்டும் என்ற நிதி ஒழுக்கத்தைக் குழந்தையருக்குச் சொல்லிக்கொடுக்க மோனோப்போலி (Monopoly) விளையாட்டு ஒரு சிறந்த பாடம். எந்த இடத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் வரும், எப்போது சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டமிடலை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க உதவும் இந்த ‘முதலாளி’.
🎲எனக்கு வந்த முதல் யோசனையிலிருந்து, அது இறுதி வடிவம் பெறும் வரை ஏஐ-யைக் கொண்டு இது எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் எளிய வரைபடமும் இந்தப் பதிவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
‘முதலாளி’ விளையாட்டிற்கான வலைத்தள முகவரி இங்கே. பயன்படுத்திப் பார்த்துத் தங்களின் கருத்தைப் பகிரவும். நன்றி.


Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

