
Sri Veeramakaliamman Temple, Singapore
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில், சிங்கப்பூர்
சென்ற வாரம் (10 மே 2019) குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கே சிரங்கூன் ரோட்டில் இருக்கும் ஹில்டன் கார்டன் இன் ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஹோட்டலின் முன்புறமே இருக்கிறது, சிங்கப்பூரில் பிரபலமான, பல்லாயிரம் மக்களால் வழிப்படப்படும் “ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில்”. அதனால் அங்கே தங்கியிருந்த போது, ஒன்றிரண்டு முறை போய் தரிசனம் செய்ய முடிந்தது.


இந்திய கோயில்களோடு ஒப்பிட்டால், சிறிய கோயில் தான், ஆனால் சுத்தமாக, அழகாக பராமரிக்கிறார்கள். சிங்கப்பூரிடம் இருந்து உலகமே கற்றுக் கொள்ள வேண்டியது “சுத்தம்“. நான் சென்ற போது வெள்ளிக் கிழமை (10 மே 2019) , அம்மனுக்கு விசேஷமான நாள், அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, ஆனாலும் பெரும்பாலும் மக்கள் வரிசையிலிருந்து சேவித்துச் சென்றார்கள்.










