தொடர்ந்து புதுமைகள் செய்து கொண்டேயிருப்பதிலும், தூய்மையிலும், சிறப்பான சேவையிலும் உலகளவில் முதலில் வருவது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது, சாங்கி விமான நிலையம் இரண்டாவது முனையத்திலிருந்து பயணம் செய்தேன்.

முனையத்தில் நுழைந்தவுடனேயே நம் காதில் அருவியின் ஓசைக் கேட்டது, கொஞ்சம் உள்ளே சென்றவுடன் கண்ணில்பட்டது – குடிநுழைவு சோதனைச் சாவடிகளுக்கு முன் கண்ணில்படுவது இந்த மிக உயர நீர் வீழ்ச்சி. இதில் உண்மையான நீர் இல்லை, இது பெரிய மின் திரை. நீர் வீழ்ச்சிக்கு முன் பாறைகள் இருப்பது போலக் காட்சிகள் வருகிறது, பறவைகள் பறக்கிறது. இதெல்லாம் சின்ன விஷயம் தான், இருந்தாலும் கண்ணைக் கவரும்படி செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது பாகுபலி ஒன்றில் வரும் முதல் காட்சித் தொடர் தான்!

சொல்ல மறந்துவிட்டேன், இந்தச் செயற்கை அருவியின் பெயர்: தி வோண்டார்ஃபால்.

 

கீழே சாங்கி விமான நிலையம் இரண்டாவது முனையத்தில் எடுத்த சில படங்கள்:

சாங்கி விமான நிலைய இரண்டாவது முனையத்தில் கடைகள்

சாங்கி விமான நிலைய இரண்டாவது முனையத்தில் கடைகள்

கண்ணைக் கவரும் படமிது - சாங்கி விமான நிலைய இரண்டாவது முனைய நுழைவாயில்

கண்ணைக் கவரும் படமிது – சாங்கி விமான நிலைய இரண்டாவது முனைய நுழைவாயில்

#ChangiAirportTerminal2 #changiairportsingapore #WaterfallDisplay