இருபது வருடங்களுக்கு மேலாக கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய நான் பயன்படுத்துவது என் நண்பர் திரு.முத்து நெடுமாறன் அவர்களின் முரசு அஞ்சல் செயலி தான். ஆங்கில தட்டச்சு ஒரளவுக்கு தெரியும் என்பதால் அதில் நான் பயன்படுத்துவது அஞ்சல் (Transliteration) தட்டச்சு அமைப்பு தான்.

இதைவிட சிறந்தது தமிழ் 99 (Tamil99) முறை என்றாலும், பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனால் செல்பேசியில் தமிழ் வந்தவுடன், அதுவும் ஐ-ஓ-எஸ்ஸில் ஆப்பிள் நிறுவனமே தமிழ் தட்டச்சு கொடுக்கத் தொடங்கியதும், ஆண்டராய்டில் முரசு செல்லினம்  வந்தவுடன், பார்த்து தொட்டு தட்டச்சு செய்வதில் அஞ்சல் அமைப்பைவிட தமிழ் 99 அமைப்பு வேகமாக இருப்பதை கண்டுக்கொண்டேன்.

அதனால் இப்போது கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய அஞ்சல் அமைப்பையும், செல்பேசியில்  தமிழ் 99 அமைப்பையும் நான் பயன்படுத்துகிறேன்.

இன்று ஒரு கூட்டத்திற்கு தமிழ் இணைய கழகத்திற்கு சென்ற போது, அங்கே விசைப்பலகை ஒன்றில் தமிழ்99 அமைப்பு எழுத்திலேயே இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்.

Tamil99_Keyboard_001

Tagged in: