சில வருடங்கள் முன் வரை தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், நான் பள்ளியில் கற்ற மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ தான் என்று நினைத்திருந்தேன். மலேசியா தமிழ் இணைய மாநாடு ஒன்றில் வேறு ஒரு பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அப்போது தான் தெரிந்தது, வேறு பல கவிஞர்களின் பாடல்களும் தமிழ் தாயை வாழ்த்த இருக்கிறது என்று, அந்தந்த அரசால்/நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடல்களும் வேவ்வேறு என்று.

தமிழ்நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து: ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ – காணொளியில் குரல்: T.M.S.

விக்கீப்பீடியா சொல்கிறது புதுச்சேரியில் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடல் அங்கே தமிழ் தாய் வாழ்த்தென்று. – காணொளியில் குரல்: Nithyashree Mahadevan

மலேசியாவில் வழக்கில் (பிரபலமாக) இருப்பது கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் “நிலைபெறநீ வாழியவே! ” பாடல். காணொளியில் குரல்: துருவன், பாபு லோகநாதன்

ஶ்ரீலங்காவிலும், சிங்கப்பூரிலும் வழக்கில் இருப்பதாக நான் கேள்வி பட்டது, பாரதியாரின் பாடலான “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி”. காணொளி இங்கே.

மற்ற இடங்களில், அரசால் எதுவும் சொல்லாவிட்டாலும் அங்கே வழக்கில் இருக்கும் பாடல் தெரிந்தால் கீழே commentsஇல் எழுதவும். நன்றி!

Categorized in: