சென்னையில் நல்ல சுவையான குஜராத்தி சாப்பாட்டு வகைகள் பல ஆண்டுகளாகக் கிடைக்கும் இடம்: அதிகம் தெரியாத அம்தாவடி குஜராத்தி உணவகம். தி. நகர் வடக்கு போக் சாலை மற்றும் வெங்கடராமன் தெரு சந்திப்பில், கோவை பழமுதிர் சோலைக்குப் பக்கத்துக் கட்டடம்.

குஜராத்தி உணவுக்கு சென்னையில் புகழ் பெற்ற இடம்: பிராட்வே குஜராத்தி மண்டல், அங்கே எளிய ஆனால் தரமான குஜராத்தி சாப்பாடு கிடைக்கும், கூட்டம் அதிகம், உக்காரக் கூட இடம் கிடைக்காது . தி. நகர் அம்தாவடியில் அமைதியான சூழ்நிலையில் கூட்டமே இல்லாமல் குஜராத்தி உணவு சாப்பிடலாம் – குஜராத்தி மண்டலை விட இங்கே வகைகள் அதிகம், விலையும் அதற்கு ஏற்ப. ஒருமுறை போய் பார்க்கவும்.

Gujarati Thali - Amdavadi Gujarati Restaurant - Chennai

Gujarati Thali – Amdavadi Gujarati Restaurant – Chennai

Amdavadi Gujarati Restaurant, Chennai - Menu

Amdavadi Gujarati Restaurant, Chennai – Menu

Tagged in: