இன்றைக்கு உறவினர் வீட்டுத் திருமணம் திருவண்ணாமலை அருகில் இருக்கும் திருத்தலமாகிய திருக்கோயிலூரில். காலை 8 மணிக்கு முகூர்த்தம் என்பதால் சென்ற வேலையும் காலை உணவும் சீக்கிரம் முடிந்தது, உடனே அருகில் இருக்கும் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் சென்று சேவித்தேன். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. உலகளந்த திருவிக்கிரமனுக்கு நல்ல நெடிய திருவுருவம், பச்சை வண்ணத்தில். பிற வைணவ கோயில்களிலிருந்து மாறுபட்டு இங்கே பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாள் அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள்.
திருக்கோயிலுக்கு உயர்ந்த கோபுரங்கள். ஊரின் பல இடங்களில் இருந்து அழகாக தெரிகிறது. தாயார் சந்நிதியில் இருக்கும் கல்தூண்களில் எதற்காகவோ தங்க நிற வண்ணங்களைப் பூசி இருக்கிறார்கள், அது சரியானதாகத் தோன்றவில்லை.

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள்

தாயார் சந்நிதி கல்தூண்களில் பூசப்பட்டிருக்கும் தங்க நிற வண்ணங்கள்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் வரலாறு மற்றும் உடையவர் திரு இராமானுஜர்
Comments