திருவண்ணாமலை அருகில் இருக்கும் திருத்தலமாகிய திருக்கோயிலூரில் இன்றைக்கு ஒரு கல்யாணம். அருகில் இருக்கும் இன்னொரு வைஷ்ணவத் திருத்தலத்தலம் ஆதி திருவரங்கம். புராதனமான கோயில் இது. நேற்று மதியம் அங்கே சென்று செவிக்கும் பாக்கியம் கிடைத்தது. சனிக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். அரைமணிக்கு மேல் வரிசையில் நின்று சேவித்தோம். பெருமாள் ரங்கநாதரைப் போலவே பள்ளிக் கொண்டியிருக்கிறார். உருவத்தில் பெரியவர் இவர், கரங்கள் பிரமாண்டமாய் இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மணலூர்பேட்டைக்கு அருகில் தென் பெண்ணை ஆற்றுப் படுக்கையில் செழிப்பான வயல்களுக்கு நடுவில் இருக்கிறது அருள்மிகு அதி திருவரங்கம் கோயில். கோயில் நாள் முழுவதும் (காலை 6:15 மணி முதல் மாலை 8 மணி வரை) திறந்து இருக்கிறது.
பெருமாள் சந்நிதி மற்றும் தாயார் சந்நிதி

அருள்மிகு ஆதி திருவரங்கம் திருக்கோயில் வரலாறு மற்றும் கோயில் திறப்பு நேரம்
Comments