திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி.  திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலைப் போல, இதுவும் ஓர் அழகான கோயில். விசாலமான இடம். உயர்ந்த மதில் சுவர்கள். கருணை வடிவான அகிலாண்டேஸ்வரி தாயார். தரைக்கு சில அடிகள் கீழே இருக்கும் சந்நிதியில் மூலவர் திரு ஜம்புகேஸ்வரர் – மிக சிறிய இடம் என்பதால் ஆறு/ஏழு பேர்கள் என்கிற எண்ணிக்கையில் குழு, குழுவாக உள்ளே அனுமதிக்கிறார்கள். நாங்கள் போனது ஞாயிறு மதிய வேளை, கூட்டம் இல்லை, ஒரு இருபது பேர் தான் இருந்திருப்பார்கள், அதனால் விரைவான சேவை.

திருவானைக்காவல் கோயிலுக்குப் போகும் முன் அதன் பெருமைகள் தெரிந்திருக்கவில்லை. உள்ளே போனவுடன் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு செதுக்கிய பல தூண்கள், அற்புதமான சிற்பங்கள் கண்ணில் பட்டது, ஒரே ஒரு படம் தான் எடுத்திருக்கிறேன். வெளியில் மழை வேறு தொடங்கியிருந்தது, அதனால் விரைவில் திரும்பி விட்டோம். அடுத்த முறை நிதானமாக பார்க்க, பல படங்கள் எடுக்க உத்தேசம்.

என் தாய் வழி தாத்தாவின் ஊர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம். அதனால் பள்ளிக்குப் போன காலத்தில் (80களில்) கோடை விடுமுறைகள் எப்போதும் அங்கே தான். அப்போதெல்லாம் வெளியில் சுற்றும் பையன் இல்லை நான் – புத்தகமும் கையுமாக இல்லை சொல்டெரிங்க் ராடுமாக இருப்பேன் – அதனால் வாய்ப்பு இருந்தும் ஸ்ரீரங்கத்தை, திருச்சியைச் சுற்றி பார்க்க தவறிவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் சென்ற போது தான், முன் போகாமல் விட்ட ஓர் இடமான இந்த திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலுக்கு போய் தரிசனம் செய்யும் வாயப்பு கிடைத்தது.

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில் வாயில்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில் வாயில்

கோயிலுக்கு போகும் வழியில் இருக்கும் கடைகள்

கோயிலுக்கு போகும் வழியில் இருக்கும் கடைகள்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில் கோபுரம்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில் கோபுரம்

திருவானைக்காவல் கோயிலில் நுணுக்கமாக செதுக்கிய தூண்கள்

திருவானைக்காவல் கோயிலில் நுணுக்கமாக செதுக்கிய தூண்கள்

மதில் சுவர், திருவானைக்காவல் கோயில்

மதில் சுவர், திருவானைக்காவல் கோயில்

மண்டபம், திருவானைக்காவல் கோயில்

மண்டபம், திருவானைக்காவல் கோயில்

அக்னி தீர்த்தம், திருவானைக்காவல் கோயில்

அக்னி தீர்த்தம், திருவானைக்காவல் கோயில்

திருவானைக்காவல் கோயில் உள் பிரகாரம் (திருச்சுற்று)

திருவானைக்காவல் கோயில் உள் பிரகாரம் (திருச்சுற்று)

குறிப்பு: பல முறை திருவரங்கம் கோயிலுக்கு, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் கோயிலுக்கு அம்மாவோடு சென்றுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சிக்குப் போன போது மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில், அருகில் இருக்கும் இடங்களுக்கு, திருச்சி இரயில் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டேன், முன்பே படங்களோடு எழுதியுமுள்ளேன்.