
An evening at Trichy Central
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல், மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் இருக்கும் பாதம் பால் கடையில் தான் ஒட்டு மொத்த திருச்சிராப்பள்ளி மாநகர மக்களும் இருக்கிறார்கள் போல. நாங்கள் இருந்த இரண்டு நாட்களும் அங்கே தான் கூட்டம். சங்கீதாஸில் உணவும், சேவையும் நல்லபடி இருந்தது, எனக்கு அருகில் இருக்கும் (பழமையான) ஹோட்டல் அஜந்தா சாப்பாடும், டிபன் தான் பிடித்திருந்தது. பாதம் பால் சுமார் தான் ரூபாய் முப்பதுக்கு அவ்வளவு தான் கொடுக்க முடியும்.
சென்னையில் பாதம் பால் என்றால் காக்கடா ராம்பிரசாத் (சௌகார்பேட்டை, பீனிக்ஸ் மால்) தான், மற்றதெல்லாம் தண்டம், போலி.






முன்பு ஒருமுறை திருச்சி சென்றிருந்த போது, இதே மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக (1930) ஞாபக சின்னத்தைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அருகில் இருந்தால் போய் பார்த்து ஒரு படம் எடுத்துக் கொள்ளுங்கள், சுதந்திரம் போற்றப்பட வேண்டும் – வரலாறு முக்கியம், அமைச்சரே!

