-
நானும் பாரதியும் – கவிதை
பாரதிக்குத் தலையில் வெள்ளை மூடி, எனக்கு வாயில் வெள்ளை மூடி! (இதெல்லாம் கவிதையா? என்கிற உங்கள் மைண்டு வாயிஸ் கேட்குது) #பாரதி #சென்னைபுத்தகக்காட்சி #முகக்கவசம் #தலைப்பாகை #chennaibookfair2022 #subramaniabharathi #poem
-
My try at writing Tamil poems
ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை இங்கே. எனது இரண்டாவது தமிழ் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி எழுதியிருக்கிறேனா? தங்கள் கருத்தைக் கீழே எழுதினால், மகிழ்வேன்; திருத்திக்கொள்ள(வும்) உதவும். நன்றி! 25th May 2022
-
Poem is easier than the meaning
தமிழ் “செய்யுள்” சொல்லிக்கொடு என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்டான். நான் பள்ளிப்படிக்கும் காலத்திலேயே “செய்யுள்” எனக்கு தகராறு. வெளிக்காட்டிக் கொள்ளாமல் முயன்றேன் – முயற்சி திருவினையாக்கும் அல்லவா? முதலில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அழகான எது “இன்பம்” என்ற கவிதை. முதல் வாசிப்பில் சில (பல) இடங்கள் புரியவில்லை. பாடநூலில் கீழேயுள்ள பொருளை வாசித்தேன். அது “முழுவதும்” விளங்கவில்லை. மீண்டும் ஒரு முறை, நிறுத்தி, பொறுமையாக கவிதையைப் படித்தேன். புரிந்துவிட்டது. மீண்டும் படித்தேன், இன்பத்தை அடைந்தேன். அடடா! கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் தான் என்ன! தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் தங்கள் புலமையை வெளிக்காட்ட மாணவர்கள் தான் கிடைத்தார்களா?. பொருளையே இப்படி கஷ்டமாக எழுதினால், தமிழ் பாடம் என்றால் ஏன் மாணவர்கள் பயப்படமாட்டார்கள்? Download the textbook for CBSE students from Tamil Nadu Government website: Std 09-Tamil-CBSE
-
A Tamil Poem about Selfie
எனது முதல் தமிழ்க் கவிதை முயற்சி: “கை நீள்வது தவறு, நீட்டாவிடில் ஏது செல்பி!”