தமிழ் “செய்யுள்” சொல்லிக்கொடு என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்டான். நான் பள்ளிப்படிக்கும் காலத்திலேயே “செய்யுள்” எனக்கு தகராறு.

வெளிக்காட்டிக் கொள்ளாமல் முயன்றேன் – முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

முதலில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அழகான எது “இன்பம்” என்ற கவிதை. முதல் வாசிப்பில் சில (பல) இடங்கள் புரியவில்லை. பாடநூலில் கீழேயுள்ள பொருளை வாசித்தேன். அது “முழுவதும்” விளங்கவில்லை. மீண்டும் ஒரு முறை, நிறுத்தி, பொறுமையாக கவிதையைப் படித்தேன். புரிந்துவிட்டது. மீண்டும் படித்தேன், இன்பத்தை அடைந்தேன்.

அடடா!

கவிஞரின் வார்த்தை ஜாலங்கள் தான் என்ன!

தமிழ் பாடநூல் ஆசிரியர்கள் தங்கள் புலமையை வெளிக்காட்ட மாணவர்கள் தான் கிடைத்தார்களா?. பொருளையே இப்படி கஷ்டமாக எழுதினால், தமிழ் பாடம் என்றால் ஏன் மாணவர்கள் பயப்படமாட்டார்கள்?

Download the textbook for CBSE students from Tamil Nadu Government website: Std 09-Tamil-CBSE

Categorized in:

Tagged in:

,