ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை இங்கே.

எனது இரண்டாவது தமிழ் கவிதை(கள்) முயற்சி, கீழே:

எது பெரிது? ஏழை மாணவியின் கையில் விலையில்லா மடிக்கணினி ஊரின் பணக்காரரிடம் லட்ச ரூபாய் மடிக் கைபேசி

எது பெரிது? ஏழை மாணவியின் கையில் விலையில்லா மடிக்கணினி ஊரின் பணக்காரரிடம் லட்ச ரூபாய் மடிக் கைபேசி

ஜெ ஜெ வென பாலங்கள் பல இருந்தாலும், சென்னைக்கு அடையாளம் "ஜெ"மினி மேம்பாலம்.

ஜெ ஜெ வென பாலங்கள் பல இருந்தாலும், சென்னைக்கு அடையாளம் “ஜெ”மினி மேம்பாலம்.

மேல் வலதில், கோடுகள் சிணுங்கி, உயிர் இல்லாமல் போனது கைப்பேசி. தலை நிமிர்ந்தேன்! மாறியிருந்தார் தமிழ்க் கடவுள், வேலுக்குப் பதிலாகக் கையில் ஜாமர் கருவி!

மேல் வலதில், கோடுகள் சிணுங்கி, உயிர் இல்லாமல் போனது கைப்பேசி. தலை நிமிர்ந்தேன்! மாறியிருந்தார் தமிழ்க் கடவுள், வேலுக்குப் பதிலாகக் கையில் ஜாமர் கருவி!

பொருள் புரியும்படி எழுதியிருக்கிறேனா? தங்கள் கருத்தைக் கீழே எழுதினால், மகிழ்வேன்; திருத்திக்கொள்ள(வும்) உதவும். நன்றி!

25th May 2022

யார் கவிஞன்? தான் நேசிப்பதை  வாசிப்பவனுடன் பகிர்பவன்  கவிஞன் !

யார் கவிஞன்? – தான் நேசிப்பதை, வாசிப்பவனுடன் பகிர்பவன், கவிஞன் !

Tagged in:

, ,