வாகனம் ஓட்டாத போதும்,
வரிசையில் இல்லாத போதும்,
சென்னைவாசிகள் நல்லவர்கள்,
மிகப் பொறுமையானவர்கள்!

ஏன், எனக்கு இந்தக் கவிதை வெறி என்று கேட்டால். இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி, அதில் முழுக்க தண்ணீர் ‘கேன்’கள், அதை மிதிக்க முடியாமல் ஓர் உழைப்பாளி (இளைஞர் இல்லை, முதியவரும் இல்லை) சிரமப்பட்டு ஓட்டி வருகிறார், இரண்டு சாலைகள் சந்திப்பில் திரும்ப முயற்சிக்கும் போது, அவருக்கு இடது புறம் இரு-சக்கர வாகனங்கள் நுழுந்து** போகிறார்கள், வலது பக்கம் ஷேர்-ஆட்டோக்கள் முந்தி செல்கிறார்கள், எதிரில் கார் ஹாரன் அடித்துக் கொண்டு இடிக்க வருகிறார். மூவரும் இரண்டு வினாடிகள் இந்தத் தண்ணீர் வண்டிக்கு வழிவிட்டால், அனைவரும் எளிதாகப் போயிருக்கலாம். ஆனால் எல்லோரும் முட்டி-மோதி, உழைப்பாளியைப் பயமுறுத்தி, ஐந்து நிமிடப் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி, பிறகு அவரவர் வழி சென்றார்கள்.

இது தான் நம்ம ஊர் சென்னை! வாழ்க சென்னை!

** நுழைந்து அல்ல, நுழுந்து சரியான வார்த்தை, இதன் பொருள் sneak.

Categorized in:

Tagged in: