இப்போதுள்ள விலைவாசியில் பத்து, இருபது ரூபாய்கள் கூட சில்லறைகள் தான். இவை போன்ற குறைந்த மதிப்பு பணத்துக்குக் காகிதத் தாளை விட நாணயங்கள் மேல், அதிக நாட்கள் இருக்கும், கசங்காது கிழியாது. அந்தவிதத்தில் சமீப காலமாகப் புழக்கத்தில் வந்திருக்கும் இருபது ரூபாய் நாணயத்தை வரவேற்கலாம். அதன் வடிவமைப்பு பரவாயில்லை. இருந்தாலும் “20” என்கிற எழுத்துக்கள் இன்னும் பெரியதாக, பார்க்க வசதியாக முன்னும் பின்னும் இரண்டு பக்கத்திலும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும். அதோடு இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எழுதியிருந்தால் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவியாகவும் இருக்கும். நன்றி.

Comments