இன்று திருச்செந்தூர் முருகர் கோயிலுக்குச் சென்றிருந்த போது பிராகாரத்தில் இந்த ஓவியங்களைப் பார்த்தேன். அதில் டச் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் தங்கம் என்று எண்ணி டச்சுக்காரர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றது பற்றியும், அதை எப்படி நாயக்கர் உதவியோடு உள்ளூர் மக்கள் மீட்டனர் என்றும் இருந்தது.

இந்த நிகழ்வு நான் அறிந்திராத ஒன்று, இந்த நிகழ்வைப் பற்றி விக்கி தளத்தில் விரிவாக இருக்கிறது. ஐரோப்பியர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தது என்றாலே நமக்கு ஆங்கிலேயர்களைப் பற்றி தான் நினைவிற்கு வரும், அவர்களுக்கு முன்பே போர்ச்சுகீஸ்காரர்களும், டச்சுக்காரர்களும் வந்து நம் செல்வங்களைச் சூறையாடி சென்றிருக்கிறார்கள் என்பதை இது போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தான், நாம் தெரிந்து கொள்கிறோம்.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே” என்று வேடிக்கையாக நடிகர் வடிவேலு கூறுவது தான் நினைவிற்கு வருகிறது!

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துச் சென்ற வரலாறு:

1. கி.பி. 1 6 4 9 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் திருச்செந்தூர் கடற்கரையில் சண்டை நடந்தது. 20-2-1649ஆம் நாள் ஆனால் திருச்செந்தூர் கோயிலில் டச்சுக்காரர்கள் பாசறை அமைத்தனர். [In February 1649, a conflict broke out between the occupying Portuguese and the Dutch. The Dutch wonover and on the 20 Febuary 1649 took control of the Tiruchendur Temple and set up their garrison there.]
1. கி.பி. 1 6 4 9 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் திருச்செந்தூர் கடற்கரையில் சண்டை நடந்தது. 20-2-1649ஆம் நாள் ஆனால் திருச்செந்தூர் கோயிலில் டச்சுக்காரர்கள் பாசறை அமைத்தனர். [In February 1649, a conflict broke out between the occupying Portuguese and the Dutch. The Dutch wonover the Portugese and on the 20th Febuary 1649 took control of the Tiruchendur Temple and set up their garrison.]
2.2. 22-2-1649ஆம் நாள் நாயக்கரின் பிரதிநிதி டச்சுக்காரர்களிடம் கோயிலில் அமைந்திருக்கும் பாசறையை உடனே காலி செய்யும்படி வேண்டுதல் டச்சுக்கார உலாந்தர் காலி செய்ய மறுத்தனர். [On 22-2-1649, the representative of the ruler Thirumalai Nayak requests the Dutch to vacate the temple, who refuse to do the same.]
2. 22-2-1649ஆம் நாள் நாயக்கரின் பிரதிநிதி டச்சுக்காரர்களிடம் கோயிலில் அமைந்திருக்கும் பாசறையை உடனே காலி செய்யும்படி வேண்டுதல், டச்சுக்கார உலாந்தர் காலி செய்ய மறுத்தனர். [On 22-2-1649, the representative of the ruler Thirumalai Nayak requests the Dutch to vacate the temple, who refuse to do it.]
3. டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்து பாசறையைக் காலி செய்ய மறுத்ததால், திரிசுதந்திரரும், முக்காணியரும் ஊரிலுள்ள மக்களும், திருமலைநாயக்கர் படையினரும் 25-2-1649 ஆம் நாள் டச்சுக்காரர்கள் போரிடுகின்றனர் அதுசமயம் டச்சுக்காரர்களின் மூவர் மாண்டனர். [3.Following this, on the 25-2-1649, the locals along with the troop of Thirumalai Nayak fought against the Dutch and in the conflict three of the Dutch got killed.]
3. டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்து பாசறையைக் காலி செய்ய மறுத்ததால், திரிசுதந்திரரும், முக்காணியரும் ஊரிலுள்ள மக்களும், திருமலைநாயக்கர் படையினரும் 25-2-1649 ஆம் நாள் டச்சுக்காரர்கள் போரிடுகின்றனர், அதுசமயம் டச்சுக்காரர்களின் மூவர் மாண்டனர். [3. Following this, on the 25th February 1649, the locals along with a troop of Thirumalai Nayak fought against the Dutch and in the conflict three of the Dutch got killed.]
4. 4. டச்சு கவர்னர் 1-3-1649ல் மாண்டவர்களுக்காக நஷ்ட ஈடு கேட்டார். அதற்குப் பதில் வராததினால் கோயிலிலுள்ள சண்முகர், நடராஜர் ஐம்பொன் சிலைகளைத் தங்கம் என்று கருதித் கொள்ளையடித்துக் கப்பலில் ஏற்றுவதற்காகப் படகில் ஏற்றிச் செல்கின்றனர். [4.The Dutch on the 1st March 1649, demanded a compensation for the three killed. That was not forthcoming, thinking that the idols of Lord Shanmuga and Lord Nataraja were made out of Gold, the Dutch looted the temple and loaded the idols onto boats to be taken by their ship.]
4. டச்சு கவர்னர் 1-3-1649ல் மாண்டவர்களுக்காக நஷ்ட ஈடு கேட்டார். அதற்குப் பதில் வராததினால் கோயிலிலுள்ள சண்முகர், நடராஜர் ஐம்பொன் சிலைகளைத் தங்கம் என்று கருதித் கொள்ளையடித்துக் கப்பலில் ஏற்றுவதற்காகப் படகில் ஏற்றிச் செல்கின்றனர். [The Dutch on the 1st March 1649, demanded a compensation for the three killed. Since it was not forthcoming, thinking that the idols of Lord Shanmuga and Lord Nataraja were made out of Gold, the Dutch looted the temple and loaded the idols onto boats to be taken to their ship in the open sea.]
5. சிலைகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும் போது சண்முகரின் சக்தியால், பெரும் மழையும் புயலும் வந்தது, கப்பலே கடலில் கவிழ்ந்து விடும் நிலை வரும் சமயம், டச்சுக்காரர்கள் சண்முகரின் சக்தியை அறிந்து சிலைகளைக் கப்பலில் வைத்திருந்தால் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, சண்முகரையும் நடராஜரையும் கடலுக்குள் போடுகின்றனர். [5.As the idols were transported from the small boats to the ship, a huge storm and outpouring rains came. Fearing for the safety of the ship, they threw the idols of Lord Shanmuga and Lord Nataraja into the sea.]
5. சிலைகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும் போது சண்முகரின் சக்தியால், பெரும் மழையும் புயலும் வந்தது, கப்பலே கடலில் கவிழ்ந்து விடும் நிலை வரும் சமயம், டச்சுக்காரர்கள் சண்முகரின் சக்தியை அறிந்து, சிலைகளைக் கப்பலில் வைத்திருந்தால் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, சண்முகரையும் நடராஜரையும் கடலுக்குள் போடுகின்றனர். [As the idols were transported from the small boat to the ship, a huge storm and outpouring rains came. Fearing for the safety of the ship, they threw the idols of Lord Shanmuga and Lord Nataraja into the sea.]
6. சண்முகர் நடராஜர் சிலைகளைக் கடலில் போட்ட உடனே மழையும் புயலும் நின்றது டச்சுக்காரர்கள் கப்பலும் தப்பியது. சண்முகரின் அபூர்வ சக்தியை அறிந்த டச்சுக்காரர்கள், சண்முகருக்கு வணக்கம் செய்து விட்டுத் தங்கள் நாடு சென்றனர். [6.Immediately after they threw the idols, the rains and storm stopped. The Dutch offered their prayers to Lord Shanmuga and left for their land.
6. சண்முகர் நடராஜர் சிலைகளைக் கடலில் போட்ட உடனே மழையும் புயலும் நின்றது ,டச்சுக்காரர்கள் கப்பலும் தப்பியது. சண்முகரின் அபூர்வ சக்தியை அறிந்த டச்சுக்காரர்கள், சண்முகருக்கு வணக்கம் செய்து விட்டுத் தங்கள் நாடு சென்றனர். [Immediately after they threw the idols, the rains and storm stopped. The Dutch offered their prayers to Lord Shanmuga and left for their land.]
7. சண்முகச் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்ற பல வருடங்களுக்குப் பின் ஒரு நாள் இரவு திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்ப பிள்ளை கனவில் சண்முகர் காட்சி தந்து, தான் கடலுக்குள் இருப்பதாகவும், கடலில் தான் இருக்கும் இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதப்பதாகவும், கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார். [7.Many years after the looting of the idols, the representative of Thirumalai Nayak, Thiru Vadamalai Pillai had a dream where Lord Shanmuga said that he is down below in the sea, and the place where he is marked by a lemon floating on top and a Garuda (Eagle) flying over in circles.]
7. சண்முகச் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்ற பல வருடங்களுக்குப் பின் ஒரு நாள் இரவு திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்பப் பிள்ளை கனவில் சண்முகர் காட்சி தந்து, தான் கடலுக்குள் இருப்பதாகவும், கடலில் தான் இருக்கும் இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதப்பதாகவும், கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார். [Many years after the looting of the idols, the representative of Thirumalai Nayak, Thiru Vadamalai Pillai had a dream where Lord Shanmuga said that he is down below in the sea, and the location in sea will be marked by a lemon floating on top and a Garuda (Eagle) flying over in circles.]
8. வடமலையப்பர், ஆதித்த நாடார், ஆலந்தலைப் பிச்சை பர்னாந்துடனும் சிலர்களுடனும் படகில் சென்று, கடலில் எழுமிச்சை பழம் மிதப்பதையும், கருடன் வட்டமிடுவதும் கண்டு, அந்த இடத்தின்- கீழ் தான் சண்முகர் இருப்பதாக எண்ணி குதித்தனர்.[Vadamalai Pillai and others went on a boat to the sea where they spotted the lemon floating and a Eagle flying over, considering it to be the spot, they sent divers in.]
8. வடமலையப்பர், ஆதித்த நாடார், ஆலந்தலைப் பிச்சை பர்னாந்துடனும் சிலர்களுடனும் படகில் சென்று, கடலில் எழுமிச்சை பழம் மிதப்பதையும், கருடன் வட்டமிடுவதும் கண்டு, அந்த இடத்தின்- கீழ் தான் சண்முகர் இருப்பதாக எண்ணி குதித்தனர். [Vadamalai Pillai and others went on a boat to the sea where they spotted the lemon floating and a Eagle flying over, considering it to be the spot, they sent divers in.]
9. கடலுக்குள் குதித்தவர் நடராஜர் சிலையையும், சண்முகர் சிலையையும் கண்டுப்பிடித்து, கடலுக்கு உள்ளே இருந்து மேலே கொண்டு வந்து படகில் ஏற்றுகின்றனர். பலகாலம் கடலுக்குள் சண்முகர் சிலை இருந்தபடியால், சண்முகர் உருவில் சில இடங்களில் சேதமடைந்திருப்பதை இன்றும் காணலாம் உப்பு தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பங்கப்பட்டிருப்பதை. [9.The divers quickly spotted the idols of Lord Shanmuga and Lord Nataraja and brought them out. As the idols had been inside the salty water for years, they had got corroded in places which are visible even now.]
9. கடலுக்குள் குதித்தவர் நடராஜர் சிலையையும், சண்முகர் சிலையையும் கண்டுப்பிடித்து, கடலுக்கு உள்ளே இருந்து மேலே கொண்டு வந்து படகில் ஏற்றுகின்றனர். பலகாலம் கடலுக்குள் சண்முகர் சிலை இருந்தபடியால், சண்முகர் உருவில் சில இடங்களில் சேதமடைந்திருப்பதை இன்றும் காணலாம் உப்பு தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பங்கப்பட்டிருப்பதை. [The divers quickly spotted the idols of Lord Shanmuga and Lord Nataraja and brought them out. As the idols had been inside the salty water for years, they had got corroded in places which are visible even now.]

Footnote:  A friend of mine and a reader of this blog, pointed out that in the above paintings the flag shown is incorrect. Instead of showing the Dutch (Netherlands) flag, the artist has drawn the French flag – both have same three colours (Red, White & Blue) but the orientation is different!

Categorized in: