-
Silicone cover for AirPods Pro case
Sometimes tiny purchases made serendipitously turn out to be useful and make you happy. A few weeks ago, I saw this item selling for INR 199 on Amazon India. The item was the “AirPods Pro Portable Silicone Skin Cover with Keychain Carabiner”, supporting Wireless Charging and has a cutout for the lightning port. I thought “who wants a cover for an AirPods Pro charger case”, anyways I went ahead and bought it. After receiving and trying out the product, I was glad I got it. AirPods Pro cases like most of the Bluetooth wireless earphones on the market are tiny and slippery. They are designed by the companies so that…
-
How to manage battery in your gadgets and more?
விஜய் அல்லது அஜீத் – உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஒருமித்த பதில் வராது. அதுபோலத் தான் கணினியின் இயங்கு தளங்களில் சிறந்தது விண்டோஸா அல்லது லினிக்ஸா என்று கேட்டால் இரு பதில்களும் வரும். இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து எளிதான ஆனால் கணினிப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய சிலவற்றைப் பார்க்கலாம். 🪫மின்கலம் என்கிற பேட்டரி மடிக்கணினியை எப்போதும் மின்னேற்றியோடு இணைத்து வைத்திருக்கலாமா அல்லது முழுச்சக்தி ஏற்றப்பட்டவுடன் மின்சாரத்தைத் துண்டித்துவிட வேண்டுமா? திரும்ப எப்போது பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்..? அடிக்கடி சார்ஜ் ஏற்றி, இறக்க வேண்டுமா? எதைச் செய்தால், செய்யாமல் இருந்தால் மடிக்கணினியில், செல்பேசியில் இருக்கும் மின்கலம் பழுதடையாது? 📶வைஃபை ரவுட்டர் சிலரின் வீடுகளில் ஏர்டெல், ஏ.சி.டி., ரிலையன்ஸ் ஜியோ போன்ற அதிவேக இணையத் தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களின் வைஃபை-ரவுட்டரை (WiFi Router) இரவில் அணைத்து விடுகிறார்கள். இது அனாவசியம், செய்யவும் கூடாது. தொடர்ந்து வாசிக்க, இன்றைய மெட்ராஸ் பேப்பரைப் பார்க்கவும்.
-
Windows 11 and Tamil
முகமது-பின்-துக்ளக் சினிமாவில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுல்தான் துக்ளக்காக வரும் சோ, அழகாகத் தமிழ் பேசுவார். திடுக்கிட்டு, “உங்களுக்கு எப்படித் தமிழ் தெரியும்..?” என்று கேட்டால், “என் காலத்திலேயே நான் ஓர் தமிழ் மேதாவி என எல்லோருக்கும் தெரியும்” என்று கிண்டலாகச் சொல்லுவார். அதுபோல, மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்கு தளத்தில் தமிழ் தோன்றவும், தமிழில் எழுதவும், தமிழைப் புரிந்து கொள்ளவும் முடியும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உண்மையில் இருப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது விண்டோஸ் 2000லேயே தமிழ் வசதி வரத் தொடங்கிவிட்டது. விண்டோஸ் 11-ல் இருக்கும் தமிழுக்கான புதி வசதிகளை இங்கே பார்க்கலாம். இவற்றைக் கொண்டு, ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்களும்கூடக் கணினியை எளிதாகப் பயன்படுத்தலாம். 1. தமிழ் காட்சி மொழி 2. தமிழில் எழுதுங்கள் – விசைப்பலகை 3. தமிழில் பேசு 4. தமிழ் பிழை திருத்தி … இன்றைய மெட்ராஸ் பேப்பர் இதழில் என் கட்டுரையின் தொடக்க பத்திகள் மற்றும் பகுதிகளின் தலைப்புகள்.
-
What electronics to pack on your next travel?
புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது, என்று பாடி ஆடிக்கொண்டே சிம்லாவை வலம் வரும் எம்.ஜி.ஆரின் கையில் இருக்கும் அந்த சிவப்புப் பெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. அவர் போவது அவரது சொந்த மாளிகைக்கு. அங்கே அவருக்குத் தேவையான அனைத்தும் – மாற்று துணி உட்பட – தயாராக இருக்கும். அதனால் புரட்சித்தலைவருக்கு அந்தச் சிறிய கைப்பெட்டி போதும். நமக்கெல்லாம் அப்படியா? போகுமிடங்களில் தேவையானவற்றை முன்கூட்டியே யோசித்து மூட்டை கட்டிக் கொண்டு செல்லவேண்டும். இப்போதெல்லாம் அந்தப் பட்டியலே செல்பேசிக்குத் தேவையானவற்றில் இருந்து தொடங்குகிறது – செல்பேசி மற்றும் அதன் மின்னேற்றி (சார்ஜர்). அவ்வளவு தானே, இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? குப்பைக்கும் பயனுண்டு வெளியூர் போன இடத்தில் செல்பேசி காணாமல் போனாலோ, உடைந்து போனாலோ நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. வாடகைக் காரை அழைக்க முடியாது, இரயில் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்ட முடியாது, போகும் இடத்திற்கு வழி தெரியாது என்று அப்படியே விறைத்துப் போய் விடுவோம். இதைத் தவிர்க்க மாற்று…
-
How to secure the contents in your smartphone?
உங்களின் செல்பேசி தகவல்களைப் பாதுக்காப்பது எப்படி? இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை. குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு என்பதைப் பற்றி எழுதியுள்ளேன், அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய, எளிய ஐந்து விஷயங்கள். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைப் பகிரவும். // பேகசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கு என்று கூகுளில் ஒரு நிமிடம் தேடிப் படியுங்கள். பிறகு இந்தக் கட்டுரைக்கு வாருங்கள். இந்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, ஐந்து செல்பேசிகளில் மால்வேர் பதுங்கியிருக்கிறது; ஆனால் அவை பயனர்களின் கவனக் குறைவால், குறைந்தபட்ச இணைய பாதுகாப்பறிவுகூட இல்லாததால்தான் நடந்தது எனச் சொல்லியிருக்கிறது. அது என்ன குறைந்தபட்ச இணையப் பாதுகாப்பறிவு? லினக்ஸில் வைரஸ் வராது, ஐபோனில் இருந்து தகவல்களைத் திருட முடியாது என்பதெல்லாம் ஓரளவுக்குதான். உங்களிடம் முக்கியமான தகவல் இருக்கிறது அல்லது நீங்கள் ஒரு பெரிய பிரபலம் என்பதால், உங்களின் கருவியைக் கைதேர்ந்த வல்லுநர் குழு குறி வைத்துவிட்டால் உங்களால் செய்ய கூடியது ஒன்றும் கிடையாது. பயமுறுத்தியது போதும். நம் கருவிகளைப் பாதுகாப்பது…
-
How to select a laptop for your need?
இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புது லேப்டாப்பைத் தேர்வு செய்வது எப்படி?. உங்கள் கருத்துக்களைப் பகிரவும். எது உங்கள் செல்லப் பெட்டி? செல்பேசியின் மூலமாகவே இன்று வங்கிப் பரிமாற்றங்கள் தொடங்கி, ஷாப்பிங், சினிமா பார்ப்பது வரையில் அனைத்தையும் செய்து பழகிவிட்டது. அந்தச் சிறிய திரையைப் பலமணி நேரம் கண்ணும் கையும் வலிக்கப் பயன்படுத்துவது கடினம் என்பதும் நமக்குப் புரிந்துதானிருக்கிறது. இதற்கு நமக்குத் தேவையான மாற்று, ஒரு மடிக்கணினி. உங்களுக்கேற்ற மடிக்கணினியை(லேப்டாப்)த் தேர்வு செய்வதற்கான மூன்று யோசனைகள். தொடர்ந்துப் படிக்க. #madraspaper #windowslaptop #ipad #chromebook
-
The wars I fought with Bluetooth earphones
இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புளுடூத் இயர்போன்களோடு எனது போர்கள். உங்கள் கருத்துக்களைப் பகிரவும். நீலப் பல் மகாராஜா ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று நாம் பாடல் கேட்கப் பயன்படுத்தும் இயர்போன்களை நம் செல்பேசியோடு இணைக்கும் புளூடூத் தொழில் நுட்பத்தின் பெயர் இந்த மன்னரின் நினைவாக வைக்கப்பட்டதுதான். வைத்தவர் ஓர் இன்டெல் நிறுவன ஆய்வாளர். நம் ஊரில் மரம் நட்ட அசோகரை நினைவுகூர்வதில்லையா? அந்த மாதிரி அவர் பாலம் கட்டிய பரதேச மன்னரை நினைவுகூர்ந்து அவர் பெயரை வைத்திருக்கிறார். புளூடூத் தரநிலை புளூடூத் என்பது கம்பி இல்லாமல், ரேடியோ அலை வரிசையின் மூலமாக மிகக் குறைந்த சக்தியில் அருகில் இருக்கும் மின்-சாதனங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் ஒரு…
-
Windows Tip: How to add an old printer to Windows 10 or 11
A friend wanted help, he has an old HP Laserjet 1018 printer and was unable to get it recognized on his Windows 10 laptop. The printer is an old model, so after connecting by the USB port, Windows was not showing it automatically. The HP.COM drivers download page was unhelpful, it said there are no drivers and suggested we use the drivers that come with the operating system. In Windows, “Add a Printer” wizard there is an option “Add Manually”. That lists only Generic and Microsoft, there were no other manufacturers including HP listed. I remembered, that starting in Windows 10, Microsoft doesn’t pre-download and list the thousands of printers…