போன ஞாயிற்றுக்கிழமை சேப்பியன் ஜீனோ ஓடையின் படப்பிடிப்புக்கு இடையே, மதிய உணவிற்கு ஒரு மாறுதலுக்காக தி ரெட் பாக்ஸ் (The Red Box) உணவகத்திலிருந்து உணவு வாங்கினோம்.
தெரியாத்தனமாக நாங்கள் தேர்வு செய்தது, வெஜ் செஷ்வான் நூடுல்ஸ் மற்றும் வெஜ் செஷ்வான் மோமோ (Veg Schezwan Noodles with Veg Schezwan Momo). காரமோ காரம்! அப்படி ஒரு காரம், காதிலிருந்து புகை மட்டுமில்லை இரத்தமே வந்துவிடும் போல இருந்தது. ஆனால் நல்ல பசி, அதனால் நிறுத்தவும் முடியவில்லை. வெறும் நூடுல்ஸைச் சாப்பிடலாம் என்றால் அதில் உப்பும் இல்லை, எந்தவித சுவையும் இல்லை, சப்பென்று இருந்தது. ஓரளவு சாப்பிட்டுவிட்டு நிறுத்திவிட்டேன். பின்னர் ஒரு இளநீரைக் குடித்து என் வயிற்றிடம் மன்னிப்புக் கேட்டேன்.
செஷ்வான் என்றால் அது காரசாரமான பூண்டு-மிளகாய் சாஸ் (சட்னி) என்று தெரியும், ஆனால் இதில் வெறும் சிவப்பு மிளகாய்ச் சாறு மட்டுமே இருந்தது. வரிகள், கட்டணங்கள் சேர்க்காமல் விலை ரூ. 299.
அடுத்த முறை இங்கிருந்து வாங்க நினைத்தால் உங்களுக்கு அதிக காரம் பிடிக்காது என்றால் தவிர்த்துவிடவும். நன்றி.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

