யு-ட்யூப்பில் வரும் சில பரிந்துரைகள் எதிர்பாராமல் நம்மை கவர்ந்துவிடும்.

அப்படித்தான் கடந்த சில தினங்களாக “ஐ ட்ரீம் ஆஃப் ஜீனி” என்கிற ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வேடிக்கையான தொடர் 1965இல் இருந்து 1970 வரை அமெரிக்காவில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

கதையின் நாயகன் டோனி என்னும் நாசா விண்வெளி வீரர். இந்தத் தொடர் தொடங்கிய காலத்தில்தான் அமெரிக்கா முதன்முதலாக நிலாவிற்கு விண்கலத்தை அனுப்பியிருந்தது.

கதைப்படி ஒரு சோதனைப் பயணத்தில் நடுக்கடலில் அவர் மாட்டிக் கொள்ள, அங்கே கிடந்த பாட்டிலிலிருந்து மிக அழகான ஒரு பெண் ஜீனி (பூதம்) வெளிவருகிறாள். இரண்டாயிரம் ஆண்டுகள் பாட்டிலுக்குள் இருந்த ஜீனிக்கு டோனியைப் பார்த்தவுடன் காதல் வந்துவிடுகிறது.

பிறகு டோனியின் வீட்டுக்கே வந்து அங்கேயே தங்கிவிடும் ஜீனி செய்யும் நல்லவை, சொதப்பல்கள், வேடிக்கைகள் என 139 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளது.

தற்போது இவற்றில் பல அத்தியாயங்கள் யு-ட்யூப்பில் இலவசமாகக் கிடைக்கின்றன. தற்காலத் தொடர்களைப் பார்த்து சலித்த எனக்கு, இந்த நம்ப முடியாத கதை ஏனோ பிடித்துவிட்டது. ஒரு பத்து அத்தியாயங்கள் மேல் பார்த்துவிட்டேன்.

அறுபதுகளின் எளிமையான உலகம், செல்பேசி, இணையம் இல்லாத வாழ்க்கையைப் பார்க்க விநோதமாக இருக்கிறது. காதில் மூட்டை நிறைய பூ சுற்றும் முட்டாள்தனமான கதை தான், இருந்தாலும் தொடர்ந்துப் பார்க்க தூண்டுகிறது.

பிரபல ஆங்கில எழுத்தாளரான சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon) உருவாக்கி, தயாரித்த இந்தத் தொடரின் பெயர்: I Dream of Jeannie.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading