படத்தில் நீங்கள் பார்ப்பது உலக வரைபடம் அச்சிடப்பட்ட கீபோர்டு மற்றும் மவுஸ் பேடு. இதில் என்ன சிறப்பு என்று தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் வரும் பல விளம்பரங்கள் செய்வது இதைத் தான். இப்படியும் ஒரு பொருள் கிடைக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும். அடுத்து, நமக்கு அது தேவையோ இல்லையோ, அவர்களின் இணையக் கடைக்கு வரவைத்து, தள்ளுபடிகளைக் காட்டி வாங்கத் தூண்டும்.

ஓரளவுக்கு இந்த விளம்பரங்களில் நான் இப்போதெல்லாம் ஏமாறுவதில்லை. இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பு இந்தப் பொருளுக்கான விளம்பரத்தைப் பார்த்ததும் உடனே வாங்கிவிட்டேன். தள்ளுபடிக்குப் பிறகு இதன் விலை ரூபாய் 215.

Portronics Comfipad Atlas World Map Desk Mat
Portronics Comfipad Atlas World Map Desk Mat
Portronics Comfipad Atlas World Map Desk Mat
Portronics Comfipad Atlas World Map Desk Mat

எனக்கு உலக வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது பிடிக்கும். அதோடு, இது அழகாகவும் இருந்தது. எனக்கும் ஒரு பேடு தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது.

இப்பொழுது வரும் சுட்டிகளை (Mouse) நேரடியாக மேஜை மீது வைத்தே பயன்படுத்தலாம். ஆனால், மெத்தென்று ஒரு கீழட்டை இருந்தால், அதன் மேல் மணிக்கட்டை வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். அதனால் இந்தப் பொருளைப் பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.

என் மேஜையில் வெறும் பேடு அழகாக இருக்கிறது, ஆனால் என் பெரிய கீபோர்டை வைத்தவுடன் ஆஸ்திரேலியாவும், கொஞ்சம் ரஷ்யா மட்டுமே வரைபடத்தில் தெரிகிறது. கீபோர்டை நகர்த்தி அவ்வப்பொழுது பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!

நான் எதிர்பார்த்ததைவிட, அதுவும் இந்த விலைக்கு, நன்றாகவே இருக்கிறது. பொருளின் பெயர் கீழே முதல் கருத்தில்.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Why I bought a World Map Mouse Pad”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading