செல்பேசிப் பயன்பாட்டால் பசங்க படிக்க மாட்டேனென்கிற புலம்பலைக் கேட்டிருப்போம்.
ஆனால், ஐபோன் (iPhone) வெளிவந்ததில் இருந்து மக்கள், பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள மாட்டேனென்கிறார்களாம். அதாவது பிள்ளைப்பேறே குறைந்துவிட்டது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்!
மேலும் விவரங்கள்:
ஜூன் 2007 முதல் பிப்ரவரி 2011 வரை, அமெரிக்காவில் ஐபோன் (iPhone) ஏடி&டி (AT&T) நிறுவனத்தின் மூலமாக மட்டுமே கிடைத்தது; இது ஒரு இயற்கையான பரிசோதனைக்கு (Natural Experiment) வழிவகுத்துள்ளது. அந்தத் தரவுகளை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வு இது.
அந்தக் கட்டுரை முன்வைக்கும் காரணங்கள்:
– நேரடிச் சந்திப்புகள் குறைதல்
– தனிமையும், அதிகரிக்கும் இணையப் பயன்பாடும்
– பாலியல் செயல்பாடுகள் குறைதல்
– டிஜிட்டல் பொழுதுபோக்குகளும், ஆபாச வீடியோக்களும்
– அதிகரிக்கும் கருத்தடை விழிப்புணர்வு
பொருளாதாரச் சூழல், மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கை வேறுபாடுகளை ஆராய்ந்த பிறகும் இந்த முடிவுகள் பொருந்திப் போகின்றன என்று சொல்லியுள்ளார்கள்.
செல்பேசி என்பது ஒரு குறியீடு மட்டுமே என்றும்; சமூக ஊடகங்கள், டிஜிட்டல் பொழுதுபோக்குகள் மற்றும் மாறிவரும் சமூக நெறிமுறைகளின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாகவே இது நடக்கிறது என்றும் இக்கட்டுரையின் ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
Reference
Is the iPhone Birth Control? Causal Evidence from AT&T’s 2007–2011 Carrier Monopoly by Caitlin K. Myers & Ezekiel Hooper.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

