Recordings of the Claude AI Cowork Workshop in Tamil – Anna AI Club & Sapien Geno

2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா ஏஐ கிளப் மற்றும் சேப்பியன் ஜீனோ இணைந்து கிளாடு ஏஐ பயிலரங்கம் நடத்தினோம். இந்தப் பதிவில், இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பயிலரங்கின் காணொலிப் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன். இது பகுதிகளாக, அனைவருக்கும் இலவசமாக வெளியிடப்படுகிறது.

பகுதி 1

ஏஐ செயலிகளில் எதற்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ள சுருக்கமான ஒன்பது நிமிடக் காணொலி. வழங்குபவர் எனது நண்பர் திரு அருள் குமரன்.

பகுதி 2

கிளாடு ஏஐ ஸ்கில்ஸ் (Claude AI Skills) என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ள இந்த 16 நிமிட செயல்முறை விளக்கத்தைப் பார்க்கவும்.

எழுதியதில் இருக்கும் தமிழ் இலக்கணப் பிழைகளை, எழுத்துப் பிழைகளை, மயங்கொலிகளைக் கிளாடு ஏஐயைக் கொண்டு எப்படிச் சுலபமாகக் களையலாம் என்பதைக் கற்கலாம்.

உங்கள் இணையத்தளத்திற்குத் தேவையான விளக்கப்படங்களை ஒரே வடிவத்தில் எப்படி ஒரு தமிழ் அச்சுப்பிழையும் இல்லாமல், கிளாடு ஏஐயில் ஸ்கில்ஸைக் கொண்டு உருவாக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் கிளாடு ஏஐ சந்தா வைத்திருந்தால், அதன் பல திறன்களில் மிக எளிதானது, ஆனால் அதிகப் பலனளிக்கக்கூடியது ஸ்கில்ஸ். இதைக் கொண்டு நீங்கள் திரும்பத் திரும்ப ஏஐயிடம் வாங்கும் வேலையைச் சரியாகவும் மதிமயங்காமலும் செய்ய வைக்கலாம்.

கிளாடைத் தாண்டி இப்போது ஸ்கில்ஸ் சாட்ஜிபிடி சந்தாவிலும் வேலை செய்யும்.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading