மேடைப் பேச்சைத் தயாரிக்க எப்படி சாட்ஜிபிடியைப் பயன்படுத்தலாம்?

அறிமுகப் பயனருக்கான இந்த காணொலியில் என்ன பேசியுள்ளேன்?

சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, நான் போக இருந்த இடத்தில் இருந்து அழைப்பு வந்தது. வணிக வழிகாட்டுதல் (Mentorship) பற்றி ஐந்து நிமிடம் பேச முடியுமா என்று கேட்டார்கள். பயணத்தில் கிடைத்த நேரத்தில், வணிக வழிகாட்டுதலால் வெற்றி பெற்ற இரண்டு கதைகளைப் பேசலாம் என்று தோன்றியது. ஒன்று இந்தியக் கதை, இன்னொன்று வெளிநாட்டுக் கதையாக இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தேன். இவற்றை கார்பிளே (Carplay) சாட்ஜிபிடியிடம் குரல் வழியாகவே பேசிப் பெற்றேன். நான் வலைத்தளத்தில் எழுதிய திரைப்பட மதிப்புரைகளை அது ஏற்கனவே அறிந்திருந்தது. அவற்றை இந்தக் கதைகளோடு இணைத்துப் பேசலாம் என்றும் யோசனை சொன்னது. அது சொன்ன கதைகளில் வெளிநாட்டுப் பெயர்கள் இருந்தன. அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, ஒவ்வோர் எழுத்தாக மெதுவாக உச்சரிக்கச் சொன்னேன். அதுவும் அப்படியே செய்தது.

அடுத்து, “இரண்டாம் மூளை” (Second Brain) பற்றிப் பேசியுள்ளேன். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் திரு விவியன் பாலகிருஷ்ணன் இதைப் பற்றி ஒரு பேச்சு கொடுத்திருக்கிறார். அதன் எளிய வடிவமாக, ஆண்ட்ரெஜ் கார்ப்பதி (Andrej Karpathy) முன்வைத்த LLM Wiki முறையைப் பின்பற்றி இருந்தேன். என்னிடம் நான்காயிரம் வலைப்பதிவுகள் இருந்தன. முப்பது ஆண்டுகளாகப் பேசிய உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள் என எல்லாமும் இருந்தன. இவை அனைத்தையும் கிளாடு கோடிடம் (Claude Code) கொடுத்து, எனக்கான இரண்டாம் மூளையை உருவாக்கியிருந்தேன். இதைப் பயன்படுத்தி, நான் பேச நினைக்கும் பேச்சின் வரைவைக் கொடுத்தால் போதும். என் பழைய எடுத்துக்காட்டுகளையும், எனது தோல்விகளையும் வெற்றிகளையும் எடுத்துக் கொடுத்து, பேச்சை எழுத உதவியது.

 

 


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading