மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செய்யப்போகும் இந்த மாற்றத்தை ஒரு தொழில்முனைவோராக வரவேற்கிறேன்.
இந்த வார ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) குழு சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானது இது. வரி ஏய்ப்பு உட்பட பெரும்பாலான தவறுகளுக்கு ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கைது செய்யும் அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கூட்டத்தின் முக்கியப் பரிந்துரைகள்:
- கைது செய்யும் அதிகாரம் நீக்கம்
- குறைந்தபட்சத் தண்டனை நீக்கம்; தண்டனையை நீதிமன்றம் முடிவு செய்யும்
- வழக்குத் தொடுக்கும் வரம்பு ₹1 கோடியிலிருந்து ₹5 கோடியாக உயர்வு
- ₹10,000-க்குக் குறைவான தொகைக்கு நோட்டீஸ் இல்லை; நிலுவையில் உள்ளவை திரும்பப் பெறப்படும்
- பொது அபராதம் ₹25,000-லிருந்து ₹10,000 ஆகக் குறைப்பு
தண்டனைகள் கடுமையாக்கப்படுவதால் குற்றங்கள் குறையாது. மாறாக, அவை லஞ்சத்தை ஊக்கப்படுத்துகின்றன. இருக்கும் சட்டங்களை ஒழுங்காக அமல்படுத்தினாலே போதும்.
குறைவான சட்டங்கள், அளவான தண்டனை, தீவிர குற்றங்களுக்கு மட்டும் கைது என்று இருப்பதே சரி. லஞ்சத் தொகையை விட அபராதத் தொகை கம்மியாக இருந்தால் லஞ்சத்தின் தேவை குறைந்துவிடும்.
இப்போதாவது நம் அரசுகளுக்கு இது புரியத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. நன்றி.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

