‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றிக் கீழே இருக்கும் பதிவில் எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்டுள்ள பாடல்களை அவரின் நினைவாகக் கேட்டு ஆறுதல் அடையலாம்.
பேஸ்புக்கில் 22 ஜூலை 2026 அன்று நான் எழுதிய பதிவு:
நான் கல்லூரியில் படித்த காலத்தில் அவரின் பல பிரபலமான பாடல்கள் வெளிவந்ததால் என்னவோ எனக்கு அவரின் பாடல்கள் மேல் ஓர் ஈர்ப்பு.
எனக்குப் பிடித்த பாடல்கள் வரிசையில் ஆசை (1995) படத்தில் வரும் “கொஞ்ச நாள் பொறு தலைவா” மற்றும் “புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி” பாடல்களுக்கு என்றுமே இடம் இருக்கும். அதோடு ரஜினியின் அண்ணாமலை மற்றும் பாஷா படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களும் பிடிக்கும்.
கடந்த சில நாட்களாக அவரின் ஒரு பாடல் தொகுப்பை யு-ட்யூப்பிலும் ஸ்பாட்டிஃபையிலும் கேட்கும்போது ஏன் அவரின் பாடல்கள் பிடிக்கிறது என யோசித்தேன். சில மாதங்களுக்கு முன் அவரின் அருமையான ஒரு காணொலியை யு-ட்யூப்பில் பார்த்த நினைவும் வந்தது.

அவரின் பாடல்கள் இன்றும் எனக்குக் கேட்கப் பிடித்திருப்பதற்குக் காரணம் அவற்றின் எளிமை.
இசைஞானியின் பாடல்களையும், இசைப்புயலின் பாடல்களையும் கேட்டு வளர்ந்திருந்தாலும், அவர்களின் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்களைக் கண்டுகொள்ளும் இசைஞானம் எனக்கு இல்லையே என்று தோன்றும். ஆனால், தேவாவின் பாடல்களைக் கேட்கும்போது அந்தக் கவலையே எனக்கு வராது; அவற்றை அணுகுவது அந்தளவு எளிது.
அவரின் பாடலை முதல் முறை கேட்கும்போதே பிடிக்கும் அல்லது பிடிக்காது, அதற்கு மேல் யோசிக்க வேண்டாம். இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாத நான் கூட ராகம் தாளம் என எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இசையமைப்பாளர் தேவா அவர்களின் பாடல்களை (மனத்திற்குள்) பாடி ரசிக்கலாம்.
தேனிசைத் தென்றல் அவர்களின் எந்தப் பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? கீழே கருத்தில் பகிரவும்.
ஓம் சாந்தி.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

