சமூக ஊடகம்: பதின்ம வயதினருக்கு வரமா, சாபமா?

இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தாலும் பதின்ம வயதினருக்கான பகுதிநேர வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதாலும் வெளியுலகில் நேரம் செலவிட அவர்களிடம் பணமில்லை. இணையத்தில் நேரம் செலவிடச் செலவு மிக மிகக் குறைவு. அதோடு, முன்பு பெருநகரங்களில் வாழ்ந்த மாணவருக்கு மட்டுமே கிடைத்த பொது அறிவு, உலக அறிவு, பிறமொழி அறிவை வளர்த்துக்கொள்ளத் தேவையான கற்றல் வாய்ப்புகள் இன்று கிராமத்தில் இருக்கும் மாணவருக்கும் சமூக ஊடகங்களால் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன.

இவற்றுக்கு எதிர்மறையான வாதங்களும் அதிகமாகவே வருகின்றன.

‘ஓடி விளையாடு பாப்பா – நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!’ என்றார் மகாகவி. ஆனால் இன்றைக்குக் குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றாலும்கூடக் குழந்தைகள் செல்பேசியும் கையுமாகவே இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மற்றவரிடம் பேசவோ பழகவோ தெரியாமல் வளர்ந்து, பதின்ம வயதுக்கு வரும்போது மனச்சோர்வாகவே இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் சமூக ஊடகங்களால் பதின்ம வயதினருக்கு என்னென்ன நல்லது கெட்டது என இந்த வாரக் கட்டுரையில் பார்க்கலாம்.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading