PDFMango, a free, open-source PDF tool that works in your browser

பி.டி.எஃப். (PDF) கோப்புகளை உருவாக்க, திருத்த உதவும் PDFMango.Mangoidiots.com.

மேங்கோஇடியட்ஸின் புதிய தயாரிப்பான PDFMangoவை இலவசமாகப் பெறலாம். PDFMangoவைப் பயன்படுத்த ஓர் இணையப் பக்கத்திற்குச் சென்றால் போதும். எதையும் தரவிறக்கத் தேவையில்லை, எந்தச் சந்தாவும் கிடையாது, விளம்பரங்கள் கிடையாது.

இந்தச் செயலி முழுவதுமாக உங்கள் கருவியில் மட்டுமே இயங்கும். உங்களின் எந்தத் தரவும், கோப்பும் உங்கள் கருவியைத் தாண்டிப் போகாது, எந்த மேகக் கணினிகளிலும் உங்கள் தகவல்கள் சேமிக்கப்படாது.

இந்தச் செயலியைக் கொண்டு:

  • படங்கள் (JPG/PNG), வேர்டு (.docx), டெக்ஸ்ட் (.txt) கோப்புகளிலிருந்து ஒரு பி.டி.எஃப். கோப்பை உருவாக்கலாம்.
  • பல பி.டி.எஃப். கோப்புகளை இணைத்துப் புதிதாக ஒன்றை உருவாக்கலாம்.
  • ஒரு பி.டி.எஃப். கோப்பில் இருக்கும் பக்கங்களின் வரிசையை மாற்றலாம், சில பக்கங்களை நீக்கலாம், நகலெடுக்கலாம், வெற்றுப் பக்கம் சேர்க்கலாம், வேண்டிய பக்கங்களைத் திருப்பலாம்.
  • மின்னஞ்சலில் அனுப்பப் பி.டி.எஃப்.ஐச் சிறியதாக்கலாம் (நான்கு நிலைகள்).
  • ஒரு பி.டி.எஃப். கோப்பில் இருக்கும் பக்கங்களை PNG அல்லது JPG படங்களாகச் சேமிக்கலாம்.
  • கடவுச்சொல் உள்ள பி.டி.எஃப்.களையும் திறக்கலாம் (கடவுச்சொல் தெரிந்திருக்க வேண்டும்).
  • முதல் முறை திறந்த பிறகு இணைய இணைப்பு இல்லாமலும் வேலை செய்யும்.
  • வேர்டு, டெக்ஸ்ட் கோப்புகள் தமிழ் உட்பட இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீனம், ஜப்பானியம், கொரியம், அரபு/உருது மொழிகளிலும் வேலை செய்யும்.

ஏன் உருவாக்கினேன்?
எனக்குப் பல சமயங்களில் பி.டி.எஃப். கோப்புகளைக் கையாள வேண்டியிருக்கிறது. இதைச் செய்ய அடோபி அக்ரோபேட்டின் ஆண்டுச் சந்தா மிக அதிகம். அதற்கு மாற்றாக திறமூலமாகப் பல மென்பொருட்கள் இருக்கின்றன, உதாரணமாக PDFArranger, ஆனால் அவற்றின் இடைமுகம் பழையதாக இருக்கிறது. இருக்கும் பல்லாயிர இணையத்தளங்களும் குப்பையாக இருக்கின்றன, மற்றவற்றில் முழுவதும் விளம்பரங்களும் தீம்பொருட்களுமாக (Malware) நிறைந்துள்ளது. ஓரளவு எனக்கு வேண்டியதைச் செய்ய நான் சில ஸ்கிரிப்ட்களை எழுதிப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் ஏஐயைக் கொண்டு நிரந்தரத் தீர்வாகவே PDFMangoவை எழுதினேன்.

கிளாடு ஏஐயைக் கொண்டு எழுதிய இந்தச் செயலியின் நிரல்களைத் திறமூலமாக வெளியிட்டுள்ளேன். இதை உருவாக்க நான் ஒரு வரி நிரல் கூட எழுதவில்லை. எனக்கு என்ன வேண்டும் என்று கிளாடு கோட்டிடம் சொன்னேன், பிராம்ப்ட்களைக் கொடுத்தேன், ஒவ்வொரு பதிப்பையும் சோதித்துப் பார்த்து மெருகேற்ற மாற்றங்களைச் சொன்னேன். இதை உருவாக்கச் சில மணி நேரம் ஆனது, அவ்வளவே.

PDFMango - Open Screen
PDFMango – Open Screen
PDFMango - Page Reordering, Adding Pages and Removing
PDFMango – Page Reordering, Adding Pages and Removing
PDFMango - PDF Exporting options
PDFMango – PDF Exporting options


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “PDFMango, a free, open-source PDF tool that works in your browser”

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading