-
ஜிமெயில் ரகசியங்கள்
என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும் இருந்தாலும் அதில் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றன. இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் அதில் சிலவற்றைப் பார்க்கலாம். ஒலியடக்கு (Mute) சிறுதுயில் (Snooze) ஆட்டோ-அட்வான்ஸ் (Auto Advance) திரும்பப் பெறுவது (Undo Send) அட்டவணைப்படி அனுப்பு (Scheduled Send) மறுபெயர் முகவரிகள் (Aliases) மேலனுப்பு (Forward) இந்தக் கட்டுரை வந்திருக்கும் பத்திரிகையை முழுவதுமாக படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!
-
USB-C, its origin and five special features
சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மடிக்கணினிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். யு.எஸ்.பி-சி ஏன் முக்கியம்? ‘சி’க்குச் சொல்வோம் சியர்ஸ்! இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையில் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையின் தோற்றம், அதன் ஐந்து சிறப்புகளை விளக்கியுள்ளேன். ஒன்று, யு.எஸ்.பி-சி முறையில் தகவலை மட்டுமில்லாமல், சாதனத்தை இயக்கத் தேவையான மின்சாரத்தையும் சேர்த்துக் கடக்கச் செய்ய முடியும். இரண்டு, இந்த முறை செருகிகளை மேலே, கீழே என எப்படி வேண்டுமானாலும் சொருகலாம். முழுக் கட்டுரையும் படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!
-
Technology trends expected in 2023
இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்த எனது கட்டுரை எதைப் பற்றியது என்றால்: இந்த புத்தாண்டு கொண்டு வரப்போக்கும் புது நுட்பங்களைப் பேசும் அறிமுகக் கட்டுரை. 5-ஜி, தோற்ற மெய்ம்மை (Virtual reality), சாட்-ஜி-பி-டி (ChatGPT) மற்றும் செயற்கை நுண்ணறிவு கலைகள் எனப் பல விஷயங்களை இதில் நீங்கள் படிக்கலாம். பிதற்றொலிகள் கிடையாது. முழுக் கட்டுரையும் ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுத்துப் படிக்கலாமே?
-
How to do better video calls, article on Madraspaper
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என்கிற நிலையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே காணொளிகள் மூலமாக வேலை செய்யும் முறை மீண்டும் வரலாம். இந்த நிலையில், எப்படிச் சிறந்த முறையில் வீடியோக்களில் பங்கு பெறலாம்? வைஃபை இணையத் தொடர்பு அழுக்கில்லா பின்புலம் வேண்டும் வெளிச்சம் பாய்ச்சவும் காமெரா (மின்கண்) முக்கியம் ஒலிவாங்கியைக் கேட்கவும் ஓ.பி.எஸ். ஸ்டுடியோ இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரை. நன்றி.
-
Why are government websites worldwide being poor?
ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் அவரது மின்சார வாரியக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதற்காக ஓர் இணைய முகவரியைக் கொடுத்தார்கள். ஒரு சிலர் மின்சாரக் கணக்கையும் ஆதாரையும் இணைக்கும் பணியை எளிதாகச் செய்தபோதிலும் பெரும்பாலானவர்களுக்குச் சிக்கல்தான். அரசு உத்தரவு என்பதால் வேறு வழியின்றிப் பலர் நேரடியாகச் சென்று இணைப்பு வைபவத்தை நிறைவேற்றிவிட்டு வந்தார்கள். இது ஒன்றிரண்டு இடங்களில் நடந்ததல்ல. மாநிலம் முழுதும். விஷயம் என்னவென்றால் இது இப்போது நடக்கும் பிரச்னை அல்ல. அரசுத் துறை சார்ந்த எந்த ஒரு இணைய நடவடிக்கையும் சிக்கலுக்குரியதாகத்தான் உள்ளது. சென்ற ஆண்டு இந்திய அரசின் நேரடி வருவாய்த் துறையின் இணையத் தளத்தை இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தயாரித்தது. என்ன பயன்? பல மாதங்கள் வரை அந்தத் தளம் தொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஐ.ஆர்.சி.சி.சி என்கிற இந்திய இரயில்வே பதிவுத் தளத்தைப் பயன்படுத்த நீங்கள் ஒரு முனைவர் பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். இன்னொரு உதாரணம். ஆதாரில் திருத்தங்கள் செய்வதை நாமே செய்ய முடியும் என்கிறார்கள். அதற்கொரு இணையத்தளம் இருக்கிறது.…
-
How to optimize Wi-Fi in your house?
இன்று வீட்டிற்கு விருந்தினர் வந்தால், ‘காஃபி வேண்டுமா, டீ வேண்டுமா?’ என்று கேட்டால், ‘அதெல்லாம் வேண்டாம், உங்கள் வீட்டு வைஃபை கடவுச்சொல் போதும்’ என்கிறார்கள். அந்தளவுக்கு வாழ்வில் ஓர் அங்கமாகி, பிறகு வாழ்வே அதுதான் என்றும் ஆகிவிட்டது. இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ்பேப்பரில் எனது கட்டுரையில் படிக்கவும்: வைஃபை என்றால் என்ன?, ஏன் வீட்டில் வைஃபை (Wi-Fi) பிரச்சனை வருகிறது?, வைஃபை ரவுட்டரைப் புரிந்து கொள்ளுங்கள், ஏன் பல வைஃபை சாதனங்கள் வேண்டும்..?, மற்றும் வைஃபை மேஷ் முழுக் கட்டுரையும் படிக்க மெட்ராஸ்பேப்பருக்கு சந்தா எடுக்கவும்!
-
Protect your SIM card
சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். என் ஆதார் அட்டை, ஆள்காட்டி விரல்ரேகை, புகைப்படம் என்று (பாஸ்போர்ட் புதுப்பிப்பில் கேட்கும் தகவல்களை போன்று) யாவற்றையும் விரிவாகக் கேட்டு இருபது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டு செய்து முடித்தார்கள். நான் பொறுமையாகக் காத்திருந்தேன். வேலை முடிந்தவுடன் அந்த ஊழியரிடம் நன்றி கூறினேன். அவர் ஆச்சரியத்துடன், “பொதுவாக இந்த அளவுக்கு நாங்கள் கேள்வி கேட்பதற்கு எல்லோரும் கோபித்துக் கொள்வார்கள். நீங்கள் ஒருவர்தான் சிரித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் பதில் கொடுத்தீர்கள்!” என்றார். ஏன் பொறுமையுடன் இருந்தேன் என்பதற்கான காரணத்தை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் படிக்கலாம். நினைவில் கொள்க, செல்பேசியின் ஆத்மா என்பது அதன் சிம்-கார்டு. அதை பாதுகாப்பது நம் பொறுப்பு. #simcard #safety
-
Windows File Recovery
பொதுவாக விண்டோஸ் கணினியில் கோப்புகளை அழித்தால் (டெலீட்), சமர்த்தாக அவை ரீசைக்கிள் பின் (Recycle Bin) என்னும் சிறப்பு கோப்புறையில் (போல்டர்) போய் உட்கார்ந்துவிடும். தவறுதலாக அழித்திருந்தால், அங்கே போய்ச் சுலபமாக மீட்டெடுக்கலாம். ஆனால் இந்த ரீசைக்கிள் பின் வசதி, யு-எஸ்-பி பென்-டிரைவ்களுக்கு, காமிராவில் போடும் மெமரி-கார்ட்களுக்குக் (சிறிய சேமிப்பு அட்டை) கிடையாது. அவற்றில் அழித்தது அழித்தது தான் – போயே போச்சு! நம்மில் பலர், இப்படிச் சில முக்கியமான பதிவுகளை இழந்திருக்கிறோம். இந்தக் கோப்புகளை மீட்டெடுக்கச் சில வழிகளை இந்த வாரம் மெட்ராஸ் பேப்பரில் வந்துள்ள எனது கட்டுரையில் படிக்கலாம். இந்த வசதியைப் பற்றி பார்க்கும்முன் விண்டோஸில் ஒரு கோப்பை அழிக்கும் போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம். விண்டோஸில் இருக்கும் ஒவ்வொரு டிரைவுக்கும் (C:, D: என்று) அதனுள் மாஸ்டர்-ஃபைல்-டேபிள் (MFT) என்னும் ஓர் அட்டவணை இருக்கும். டிரைவில் இருக்கும் ஒவ்வொரு ஃபைலும் எந்த இடத்தில் எழுதப்பட்டுள்ளது, அதன் பெயர் என்ன, அதன் அளவு என்ன என்று பல விவரங்களும் இந்த…