எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். அந்தளவு ஒவ்வொருவருக்கும் இசை விருப்பம் தனிப்பட்டது. இதைச் சொன்னவர் பெரிய இசைக் கலைஞரோ மேதையோ இல்லை. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு யார் வேண்டுமானாலும் பாடல்களை உருவாக்க உதவும் சுனோ.ஏஐ (Suno.AI) செயலியின் நிறுவனரான மைக்கேல் ஷுல்மன் (Michel Shulman).
2021இல் மைக்கேலுடன் ஜார்ஜ் குக்ஸ்கோ, மார்ட்டின் காமாச்சோ, கீனன் ஃப்ரைபர்க் ஆகியோர் சேர்ந்து தொடங்கியதுதான் சுனோ. நிறுவனர்கள் நால்வரும் சுனோவிற்கு முன்னர் அமெரிக்காவின் கேம்பிரிஜ் நகரில் இருந்த கென்ஷோ (Kensho) என்கிற இயந்திரக் கற்றல் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். குறிப்பாக, நிர்வாகத் தலைவரான மைக்கேல் இயற்பியலில் இளங்கலையும், குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஆராய்ச்சி செய்து மெய்யியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


எல்லா துறையிலும் செயற்கை நுண்ணறிவு அதன் பங்களிப்பை செய்தாலும் கலை சார்ந்த படைப்பில் வருவது எந்த அளவுக்கு நன்மை தீமை என்பது நமது எதிர்காலத்தில்தான் தெரியும்..
அறிவுசார் தளங்களில் செயற்கை நுண்ணறிவு அதன் ஆதிக்கத்தை செலுத்தும்போது இன்னும் பல குழப்பங்கள் உருவாகுமா? இல்லை இவை எல்லாம் ஆக்கப்பூர்வமான முன்னேற்றமா? பெருங்குழப்பமே எனக்கு தோன்றுகிறது..செயற்கை நுண்ணறிவு மனிதனின் சிந்திக்கும் ,புதிதாக படைக்கும் ஆற்றலை குறைத்து விடுமோ என பயம் எனக்கு உள்ளது..எது எப்படியோ ஒத்திசைந்து வாழ்வோம்..என்னதான் வருகிறது ஒரு கை பார்த்து விடுவோம்…