தினமும் பல இணைய முகவரிகளை நாம் கடக்கிறோம். ஒரு சில கட்டுரைகளைப் படித்தவுடன் இது முக்கியமானது என்று தோன்றும். அதே போல வாட்ஸ்ஆப்பில் அல்லது பேஸ்புக்கில் வரும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை நம் ஆர்வத்தைத் தூண்டும். ஆனால் அப்போது படிக்க நேரமிருக்காது. இந்த மாதிரி சுழல்களில் கட்டுரையின் முகவரியைச் சேமித்து வைத்துக் கொண்டால், பின்னர் நேரம் கிடைக்கும் போது பார்க்க வசதியாக இருக்கும்.
கட்டுரைகள் என்றில்லை, வீடியோக்களாக இருக்கலாம், பாட்காஸ்ட் ஒலிப்பதிவுகளாக இருக்கலாம், எல்லா வகையான இணைய முகவரிகளைப் பட்டியலாகச் சேர்த்து வைப்பது புக்மார்க்கு (Bookmark) சேவைகள். பொதுவாக நாம் பயன்படுத்தும் இணைய வலையுலாவிகளிலேயே இதற்கான வசதியிருக்கும். இருந்தாலும் தனியான செயலியில் செய்வது சிறப்பு. ஏனென்றால் புக்மார்க்குகளை நிர்வாகம் செய்யும் வசதிகள் கிரோம், ஃபயர்பாக்ஸ் போன்றவற்றில் நன்றாக இருக்காது. இதற்காகவே இருந்த செயலி பாக்கெட், இது ஃபயர்பாக்ஸ் வலையுலாவியைத் தயாரிக்கும் மொசில்லா நிறுவனத்தின் படைப்பு. சென்ற மாதம் (மே 2025) இந்தச் சேவையை நிறுத்திக் கொள்கிறோம் என்று அறிவித்துவிட்டது மொசில்லா. பல ஆண்டுகளாக எல்லாக் கணினிகளிலும் புக்மார்க்குகளை சேமிக்கப் பலர் பயன்படுத்துவது இதையே. இதிலிருந்து மாற வேண்டிய தேவை இப்போது. மாற்றாக ரெயின்ட்ராப்.ஐஓ (Raindrop.io) செயலியைச் சொல்லலாம். இந்த வகையில் இருக்கும் செயலிகளிலேயே எளிதாகவும், நன்றாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது ரெயின்ட்ராப்.
தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


அன்பின் ரங்கன் ,
பயனுள்ள அதிமுக்கிய தகவல்…மொசில்லா வின் இச்சேவை நிறுத்தப்படும் சமயத்தில் அதற்கு மாற்றாக எழுதில் உபயோகம் செய்யவேண்டிய உபயோக படுத்த ஒரு செயலி வேண்டும்…
பெயர் போலவே செயலியும்,அதில் உள்ள தகவல்களும் , சிறு துளி பெருவெள்ளமென நாளும் படித்து படிக்க மறந்ததைநினைவில் வைத்து சிரமப்படாமல் சேமித்து ஓய்வு நேரத்தில் பயன்படுத்த நல்ல செயலி…சில தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில உள்ளீடுகள் இருந்தால் இன்னும் சிறப்பாக புரியும் .. எடுத்துக்காட்டாக குரோம் செயலிக்கு நீட்சி (Plugin ) என நினைக்கிறேன்…
சேர்த்து கொடுங்க…
நல்ல பயனுள்ள கட்டுரை..இன்றே தரவிறக்கம் செய்கிறேன் …நன்றி ரங்கன்…
என்றும் அன்புடன்,
சங்கரா