நம் எல்லோருக்கும் தினமும் இருக்கும் சிக்கல் இது. முன்பு எப்பொழுதோ தெரிந்திருந்த ஒருவரை இப்போது எப்படித் தொடர்பு கொள்வது? செல்பேசி தொடர்புகளில் பார்த்தால் அவருடைய எண்ணோ முகவரியோ இருக்காது. பேஸ்புக்கில் இருக்குமா? வாட்ஸ்ஆப்பில் இருக்குமா? லிங்க்டின்னில் இருக்குமா? என்று ஒவ்வொன்றாகத் தேட வேண்டும்.

இதே பிரச்சனை நிறுவனங்களுக்கும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பயனர்களின் தொடர்புகளை எப்படித் தொகுப்பது? சேமிப்பது? அவர்களுடன் எப்போது, யார், என்ன பேசினார்கள்? அவர்களுக்குக் கடைசியாக என்ன செய்தோம் என்று இது விரிவடைந்து கொண்டே போகும். இதைக் கையாள நிறுவனங்கள் “வாடிக்கையாளர் உறவு மேலாண்மை” (CRM) என்கிற சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு உதாரணமாக சென்னையிலிருந்து வரும் பிரஷ்வோர்க்ஸ் (Freshworks), உலகளவில் முன்னணியில் இருக்கும் செல்ஸ்போர்ஸ் (Salesforce) போன்ற மென்பொருள்களைச் சொல்லலாம்.

ஆனால் தனிப்பட்ட பயனர்களுக்கு அவருடைய அன்றாட வாழ்வில் இதுவரை தொடர்புகள் மேலாண்மைக்கு எந்தச் செயலியும் இல்லை. இதைச் செய்யக் கடந்த இருபது ஆண்டுகளில் பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் எதுவுமே பயனர்களின் வரவேற்பைப் பெறவில்லை. காரணம், பொதுவாக நம்மில் பலரும் அலுவலகத் தகவல்களுக்குக் கொடுக்கும் அக்கறையை நம் தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்கவோ, தொகுக்கவோ கொடுப்பதில்லை. அப்படிச் செய்தால் லாபம் எதுவுமில்லை என்று நினைக்கிறோம். இருந்தாலும் மக்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று நம்பி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செயலி வந்திருக்கிறது. அதன் பெயர் டெக்ஸ் சி.ஆர்.எம். (Dex CRM).

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading