மூன்று பேர், மூன்று நிமிடம்

‘இந்தியாவின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் இருக்கும் பெட்டிக்கடைகளை நடத்துபவர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். நாள் முழுவதும் கடையிலேயே இருப்பவர்களுக்குத் திறமைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், ஆனால் நேரம் இருக்காது. உதாரணமாக ஒரு யூட்யூப் சேனலை நடத்துவது எவ்வளவு சுலபம் என்பது தெரிந்தால் இவர்களும் வெற்றி பெறலாம். இப்படி வேலையில் இருப்பவர்களால் கற்க முடியாது என்கிற நிலை மாற வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே சில நிமிடங்களுக்குள் கற்றுக் கொடுப்பதே எங்களின் நோக்கம்’ என்கிறார் ரோஹித் சௌத்ரி.

இவர்தான் ‘சீகோ’ (seekho) செயலியின் நிறுவனர். இன்று ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் கற்றலுக்கான செயலியை உருவாக்கியவர்.

இணைய வழிக் கல்வி என்றாலே நாம் இந்திய அரசின் ஐஐடிகள் நடத்தும் ஸ்வயம், தமிழக அரசின் கல்வி டிவி, சிக்கலில் இருக்கும் பைஜூ போன்றவை நினைவுக்கு வரும். இவை எல்லாமே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானவை. ஆனால் கற்றல் என்பது ஒவ்வொரு மனிதனும் கடைசி மூச்சு இருக்கும் வரை செய்ய ஆசைப்படுவது.

தொடர்ந்து படிக்க, மெட்ராஸ் பேப்பர் முகவரியைத் தொடரவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

3 thought on “மூன்று பேர், மூன்று நிமிடம்”
  1. நல்ல‌செயலி…
    நோக்கமும் சிறப்பாக உள்ளது…பதிவிறக்கம் செய்துள்ளேன்…பயன்படுத்தி பார்க்கிறேன்…

    அதைப்போல் இவர்களின் எண்ணங்களும் அதற்கான தேர்ந்த முயற்சிகளும் மாறிவரும் உலகில் தேவையான ஒன்று…

    Seek Goஎன தான் நான் பிரித்து படிக்கிறேன்…

    என்றும் அன்புடன்
    சங்கரா

  2. மூன்று பேர், மூன்று நிமிடம் – மெட்ராஸ் பேப்பர் தொழிநுட்ப கட்டுரை – வாசிப்பு அனுபவம்

    கட்டுரையின் தலைப்பு அருமை. சில நிமிடங்களை மட்டும் ஒதுக்கி ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை அவர்கள் யூடியூபிலேயே செய்திருக்கலாம். ஆனால் துணிந்து நிறுவனம் ஆரம்பித்து, செயலியாக வெளியிட்டமை உண்மையில் துணிச்சலான ஒரு தீர்மானம். காரணம் சொந்த செயலி எனும்போது அதில் தரவுகளைப் பாதுகாக்க வேண்டும், அப்டேட் கொடுக்க வேண்டும், இயங்குதளங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப புதுப்பிப்புகளை மேற்கொள்ள வேண்டும், சைபர் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும். இப்படி எண்ணிலடங்கா சவால்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றைத் தாண்டி, காலடி எடுத்து வைத்து, வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருப்பது சிறப்பு. நல்ல முதலீட்டையும் வருமானத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

    சீகோ செயலியில் வழங்கப்படும் குறும் ‘பாடங்கள்’ உண்மையிலேயே பயனுள்ளவை. கற்றுக் கொள்ள தேவையானவற்றை மட்டுமே காணொளியாக வழங்குவதால் வேறு தேவையற்ற காணொளிகளில் கவனம் சிதறும் தொல்லை இல்லை.

    தமிழில் உண்மையில் பாரிய தொழிநுட்ப படைப்புகளுக்கான சந்தை இருக்கிறது. விவரம் அறிந்தவர்களும் யூடியூபைத் தாண்டி சிந்திப்பதில்லை. இந்த நிலைமை மாறி, தரமான உள்ளடக்கங்களைக் கொண்ட தனியான செயலிகள் வர வேண்டும். தேவை நம்பிக்கையும், கொஞ்சம் முதலீடும், தரமான உள்ளடக்கமும் தான். சரியான திட்டமிடலுடன் களமிறங்கினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை சீகோ செயலி நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. தமிழில் திறந்து கிடக்கும் சந்தையை நாம் பயன்படுத்தப் போகிறோமா? அல்லது சர்வதேச வணிக முதலைக்காக காத்திருக்கப் போகிறோமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  3. மதிப்பிற்குரிய கட்டுரை ஆசிரியருக்கு,
    வணக்கம்.

    தாங்கள் எழுதிய ‘மூன்று பேர், மூன்று நிமிடம்’ என்ற தலைப்பிலான ‘சீகோ’ (Seekho) செயலி பற்றிய கட்டுரையை வாசித்தேன்.

    ‘சீகோ’ செயலியின் நோக்கத்தையும், அதன் நிறுவனர்களின் தொலைநோக்குப் பார்வையையும் மிக எளிமையாக விளக்கியிருந்தீர்கள். குறிப்பாக, சிற்றூர் மக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரையும் மனதில் கொண்டு, சில நிமிடங்களில் பயனுள்ள பாடங்களைக் கற்றுத்தரும் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

    செயலியின் வளர்ச்சி, அதன் வணிக மாதிரி, மற்றும் அது பெற்ற முதலீடுகள் போன்ற விவரங்களைத் தாங்கள் தொகுத்தளித்த விதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    கட்டுரையின் முடிவில், இது போன்ற ஒரு முயற்சியைத் தமிழில் தொடங்கினால் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பலருக்கும் ஒரு புதிய சிந்தனையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.

    நன்றியுடன்,

    ரா. சுரேஷ் பவானி

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading