Use Your Windows Keyboard on Mac — Exactly Like You Would on Windows
Use Your Windows Keyboard on Mac — Exactly Like You Would on Windows

மில்க் பிக்கிஸ் அளவு மேக் மினி (Mac Mini) வாங்கிய கதை சொன்னேன் — இப்போது அதை விண்டோஸ் (Windows) போலப் மாற்ற என்ன செய்தேன் தெரியுமா?

எனக்கு முப்பது ஆண்டு விண்டோஸ் (Windows) பழக்கம். Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Win+E எல்லாம் கை வந்த கலை, யோசிக்காமல் செய்யும் வேலை. மேக்கில் (Mac) அதே விரல்கள் வைத்தால்… ஒன்றும் நடக்காது, அல்லது தப்பான காரியம் நடக்கும். காப்பி-பேஸ்ட் (Copy-Paste) கூட Command விசையில் தான் — Ctrl-ல் இல்லை. விண்டோஸுக்கும் மேக்குக்கும் தினமும் தாவும்போது இது ஒரு பெரிய தொல்லை – ஏண்டா மேக் கணினிக்கு மாறினோம் என்று தோன்றும்.

நாம் எல்லோரும் பழக்கத்தின் அடிமைகள்தானே?

கரபைனர்-எலிமெண்ட்ஸ் (Karabiner-Elements) என்று ஒரு இலவச மேக் செயலி இருக்கிறது. விசைப்பலகையில் (Keyboard) இருக்கும் ஒவ்வொரு விசையும் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் விருப்பப்படி மாற்றிக்கொள்ள இந்த செயலி வழி செய்யும். அதற்கு ஒரு JSON கோப்பு எழுத வேண்டும். சாதாரணமாக நாம் இதை எழுதப் பல மணி நேரமாகும், ஆனால் நமக்குத் தான் இப்போது செய்யறிவு (AI) இருக்கிறதே!

க்ளோட் (Claude) செய்யறிவைப் பயன்படுத்தி இந்தக் கோப்பைத் தயாரித்தேன். நான் நிரலாக்கம் (Coding) எதுவும் செய்யவில்லை. க்ளோட்  கொடுத்த கோப்பை நான் பரிசோதித்தேன், இருவரும் இணைந்து சரி செய்தோம்.

இப்போது மேக்கில் ) Ctrl+C காப்பி ஆகிறது, Win+E-ல் ஃபைண்டர் (Finder) திறக்கிறது, Win+L-ல் திரையைப் பூட்டுகிறது, Delete விசையை அழுத்தினால் கோப்புகள் குப்பைத் தொட்டிக்கு (Bin) போகின்றன. VS Code, Chrome, Terminal, Word — என்று எல்லா இடத்திலும் விசைகள் விண்டோஸில்  வேலை செய்வது போலவே வேலை செய்கின்றன.

உங்களுக்கு இந்தத் தேவை இருந்தால், அதாவது மேக்  கணினியில் விசைப்பலகையை விண்டோஸ்  விசைப்பலகை போன்று மாற்ற விரும்பினால், முழு விவரங்களும் இந்த கிட்-ஹப் (GitHub) திட்டப்பணியில் (Project) இருக்கின்றன (முகவரி முதல் கருத்தில் இருக்கிறது). இதை இலவசமாக, திறமூலமாக (Open Source) வழங்கியுள்ளேன்.

நிறுவிய பிறகு சில அமைப்பு மாற்றங்கள் செய்ய வேண்டும் — முழு விவரம் கிட்-ஹப்பில்  உள்ளது.

இந்தக் கரபைனர்-எலிமெண்ட்ஸ் (Karabiner-Elements) செயலியை உருவாக்கியது ஒரு பெரிய நிறுவனம் அல்ல — தகயாமா ஃபுமிஹிகோ (Takayama Fumihiko) என்ற ஒரு ஜப்பானியச் தன்னார்வ (Freelancer) நிரலாளர். உலகம் முழுக்க 20,000-க்கும் மேற்பட்ட பேர் இந்தத் திறமூல திட்டத்தை நேசிக்கிறார்கள்.

Karabiner-Elements Profile
Karabiner-Elements Profile

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading