இன்றைய செய்யறிவு உலகில் வேலைக்கு ஆட்களை எடுக்கச் செய்யப்படும் நேர்காணல்கள் எப்படி இருக்க வேண்டும்? இந்த காணொலியில் நண்பர் அருளும் நானும் இந்தத் தலைப்பிலேயே நானும் இன்றைய பாட்காஸ்டில் பேசியிருக்கிறோம் (கீழே). பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பகிரவும்.
ஒரு துளிர் தொழிலுக்கு (ஸ்டார்ட்அப்பில்) பயிற்சி மாணவர்களை எடுக்க நான் நேர்காணல் செய்தேன். அப்போது மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்குப் பதிலாக சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளையும் யு-ட்யூப்பைப் பயன்படுத்திப் படிப்பதைக் கண்டறிந்தேன். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னைப் பொருத்தவரை இது கற்கும் முறைகளில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. அதனால் இனி நேர்காணல்களிலும் பழைய நடைமுறை ஒத்துவராது என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
ஏஐயை ஒரு “ஏமாற்று” கருவியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதை ஒரு “இயக்கும்” கருவியாகப் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் நிரல்களில் 30 இயற்றறிவு மூலம் உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு மென்பொருள் பொறியாளர் நிரல்களையும், கட்டளைகளையும் மனப்பாடம் செய்வதை விட செய்யறிவு கருவிகளை எந்தளவு திறமையாகப் பயன்படுத்தி வேலையை முடிக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்ற என் கருத்தையும் பகிர்ந்துள்ளேன்.
சில நிறுவனங்கள் நேர்காணல் சாட்ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக் கொடுக்கிறார்கள். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படுவது கணி நெறிகளை தாண்டி, நிஜ உலகச் சிக்கல்களைப் பற்றி நேர்காணல்களில் கேட்கப்படுகிறது. வரும் வேட்பாளர்களுக்கு ஏஐ செயலிகளை எப்படிப் பயன்படுத்து என்று தெரிந்திருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது.
உதாரணமாக பத்திரிகை போன்ற பிற துறைகளிலும் ஏஐயின் தாக்கத்தைப் பேசியிருக்கிறோம். ஒரு பத்திரிகையாளர் செய்யறிவைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை இந்திய மயமாக்கலாம், ஆனால் இறுதி உள்ளடக்கத்தின் படைப்பாற்றல் பத்திரிகையாளரிடமே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருவிகளாகப் பயன்படுத்த வேண்டும். தனிநபர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் வகையில் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
வீடியோவை இங்கே காணலாம்:
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

