ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ‘புரொஜெக்ட் கிளாஸ்விங்’ (Project Glasswing) எனும் அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘கிளாஸ்விங்’ என்பது ஒரு வகை பட்டாம்பூச்சி, அதன் சிறகுகள் கண்ணாடியைப் போலத் தெரிவதால் அது எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். அதேபோல, நாம் இத்தனை காலம் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருந்த மென்பொருள்களில், பல ஆண்டுகளாக ஒளிந்திருந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்பு ஓட்டைகளை (Security Flaws) ‘கிளாடு மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற புதிய ஏ.ஐ. மாதிரி இப்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, 27 ஆண்டுகளாக யாராலும் கண்டறியப்படாத ஓட்டைகளையும், கோடிக்கணக்கான முறை சோதிக்கப்பட்டும் பிடிபடாத பிழைகளையும் இது மிக எளிதாகக் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு ஒருபுறம் நமக்கு நம்பிக்கையைத் தந்தாலும், மறுபுறம் பெரும் எச்சரிக்கையையும் விடுக்கிறது. மென்பொருள்களில் உள்ள குறைகளை விரைவாகக் கண்டுபிடித்துச் சரிசெய்ய இப்போது நமக்கு ஒரு வலிமையான கருவி கிடைத்துவிட்டது. ஆனால், அதே தொழில்நுட்பம் தவறான மனிதர்களின் கைக்குச் சென்றால், ஒரு பாதுகாப்பு ஓட்டையைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவதற்கு அவர்களுக்குச் சில நிமிடங்களே போதும்.

இனி ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் பாதுகாப்புச் சோதனைகள் (Security Audit) மட்டும் போதாது என்பதும், தொழில்முனைவோர் இதில் ஏன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறித்து இந்தப் புதிய காணொலியில் நானும் நண்பர் ஷானும் விரிவாகப் பேசியிருக்கிறோம். யு-ட்யூப்பில் கண்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

இந்தக் காணொலி பத்தாயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களை ஊக்கப்படுத்திய பார்வையாளர்க்கும், நண்பர்க்கும் நன்றி. இது முதல் படியே; இன்னும் நாம் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம்.

தமிழில் உறுதி செய்யப்பட்ட, சரியான தகவல்களைச் செயற்கை நுண்ணறிவுத் துறையைப் பற்றிப் பேசத் தொடங்கியது சேப்பியன் ஜீனோ ஓடை.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “கிளாடு மைத்தோஸ் – இனி யாருக்கும் பாதுகாப்பில்லையா? | புரொஜெக்ட் கிளாஸ்விங்”
  1. one quick question, by sharing to big giants will their mythos AI model, they can understand the flow and logics what have been implemented which is not part of opensource which is not a vulnerability? it will not use the logic to train their model.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading