பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்
பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

அது பொறியியல் படிப்பாகட்டும், மேலாண்மைப் பட்டமாகட்டும் அல்லது இதர கல்லூரிப் படிப்புகளாகட்டும்… நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆரம்பநிலைச் சம்பளம் என்னவோ ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் விலைவாசியோ ஏவுகலங்கள் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது இவர்களுள் பலருக்கும் இன்று வெறும் பகற்கனவுதான். படிப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத இந்தச் சூழலுக்குத் தீர்வுதான் என்ன? இதனால் தான் வெளிநாட்டு மோகம் இன்றும் நம் இளைஞர்களுக்கு இன்னும் விடவில்லை. அவர்களை இந்தியாவிற்கு திரும்பவும் என அழைக்கும் பல நிறுவனர்களும் அதிகச் சம்பளம் கொடுக்க தயாரா, அது இந்தியாவில் சாத்தியமா என்று தெரியவில்லை.

How Much is a Fresher's College Degree Worth?
How Much is a Fresher’s College Degree Worth? (Data Courtesy: Mint Newspaper – 29 April 2026)

அதே சமயம், அதிகம் படிக்காவிட்டாலும் நல்ல திறமையுள்ள குழாய்ப் பிளம்பர், தச்சர், ஓட்டுநர், சமையல்காரர் மற்றும் முதியோரைப் பேணுவோருக்குச் சம்பளம் அல்லது கூலி முன்பைவிட நன்றாகவே கிடைக்கிறது. சென்னை போன்ற நகரங்களில், சில ஆண்டுகள் அனுபவமுள்ள, ஓரளவுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி பேசத் தெரிந்த ஓட்டுநருக்குச் சாதாரணப் பட்டதாரிகளை விடவும் அதிகச் சம்பளம் கிடைக்கும் நிலை உள்ளது.

நான் இதை எந்த உழைப்பாளியையும் குறைத்து மதிப்பிடுவதற்காகச் சொல்லவில்லை; பட்டப்படிப்பை மட்டுமே நம்பியிருக்கும் இன்றைய சந்தையின் தலைகீழ் எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டவே சொல்கிறேன்.

இதற்குத் தீர்வு என்ன?


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading