• Articles,  Microsoft,  தமிழ்

    ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

    உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்ற வாரம் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென் பொறியாளர்களின் மாநாடான மைக்ரோஃசாப்ட் பில்ட் 2023-ல் என்னென்ன சொல்லப்பட்டன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே: விண்டோஸ் கோ-பைலட் இன்றைக்குச் செல்பேசியாகட்டும் கணினியாகட்டும்… அவற்றில் இருக்கும் வசதிகள் பல ஆயிரம். என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவற்றை எங்கே போய் இயக்குவது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்வது இயலாத செயல். தேடுபொறியில் தேடிக் கண்டு கொண்டாலும் அவற்றைச் சரியாக இயக்குவது கடினம். இந்தக் குறையைக் களைய, ‘மைக்ரோசாப்ட் துணை விமானி’ (கோ-பைலட்) என்னும் சேவையை விண்டோஸில் கொண்டு வருகிறார்கள். இதைக் கொண்டு என்ன செய்யலாம்? கோப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்…

  • Articles,  தமிழ்

    எங்கெங்கு காணினும் ஆப்புகளடா!

    உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு செயலிகளைத்தான் மொத்த உலகமும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. உண்மையில் பல லட்சக்கணக்கான செயலிகள் அண்ட வெளியெங்கும் நிறைந்திருக்கின்றன. நாம் பயன்படுத்தத் தவறும், ஆனால் முக்கியமான சில செயலிகளை இங்கே பார்ப்போம். எழுதுவதற்கு – ஸ்கரிவேனர் (Scrivener), ஐ.ஏ. ரைட்டர் (iA Writer) புத்திசாலியாகவும்! – ப்ரெய்ன்-ஸ்பார்க் (BrainSparker), மைன்டு-முப்பு (mindmup.com) ஆரோக்கியமாக இருக்கவும் – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செவன்-மினிட்-வொர்க்அவுட் (Johnson & Johnson 7 Minute Workout)

  • Articles

    கூகுள் ஐ.ஓ. 2023

    கூகுள் ஜீபூம்பா:  கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை செய்ததிலிருந்து கூகுள் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறது. இந்தப் போட்டியை அது எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று அனைவரும் அந்த நிறுவனத்தின் வருடாந்திர மென்பொறியாளர்களின் மாநாடான கூகுள் ஐ.ஓ.வைக் கவனித்தார்கள். அப்படி அந்த மாநாட்டில் என்ன புதுமைகள் வெளிவந்தன என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

  • Articles,  தமிழ்

    சிறு வியாபாரிகளும் கலக்கலாம்!

    இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு நிறுவனங்களும், ஏன்… தனி ஒருவர் செய்யும் வியாபாரங்களும் கூடச் சில எளிய செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் நேரத்தை மிச்சப்படுத்தி, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கலாம். இவற்றில் பலவும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஜோகோ இன்வாய்ஸ், மைக்ரோசாப்ட் புக்கிங் மற்றும் ஃபிரெஷ் வொர்க்ஸ் சி. ஆர். எம். இவற்றைப் பற்றிய இன்றைய மெட்ராஸ் பேப்பரில் ஒரு குறு அறிமுகம். சந்தா எடுக்கவும், படிக்கவும், கருத்துக்களைப் பகிரவும். நன்றி!

  • Articles,  தமிழ்

    கூகுள் ஷீட்ஸ் விரிதாள்கள்

    கணக்குகள் போட, பல்வேறு மூலத்தரவுகளை விரைவாகப் பகுத்துப் பார்க்க, எந்த வகை அட்டவணைகளையும் எளிதாகச் செய்ய என அலுவலகங்களில் தினமும் பலநூறு முறை பயன்படுத்தப்படும் மென்பொருள் விரிதாள்கள் (ஸ்ப்ரெட் ஷீட்ஸ்). இதில் பிரபலமானது மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் அதைப் போன்ற கூகுள் ஷீட்ஸ். இந்த இரு நிறுவனங்களும் பல புதிய வசதிகளைக் கடந்த ஆண்டுகளில் கொண்டு வந்திருக்கிறார்கள், அவற்றில் கூகுள் ஷீட்ஸில் சமீபத்தில் வெளிவந்துள்ள சிலவற்றை இந்த வார மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் காணலாம். தேதிகள் ஸ்மார்ட் சிப்ஸ் பீப்பிள் ஸ்மார்ட் சிப்ஸ் பிளேஸ் ஸ்மார்ட் சிப்ஸ் ஸ்மார்ட் ஃபில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் எங்கேயும் எப்போதும் காணொலி நேர வரைபடம் பெயரிடப்பட்ட செயலாற்றிகள்

  • Articles,  தமிழ்

    ஆன்ட்ராய்ட் பதிநான்கு

    ஆப்பிள் நிறுவனம் புது ஐ.ஓஎஸ். பதிப்பை வெளியிட்டால், சில நாட்களிலே பலரின் ஐபோனுக்கும் அது கிடைத்துவிடும். ஆனால் கூகுள் புது ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்டால் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும், நம்மை வந்து சேர. பல நேரங்களில் அது நாம் வைத்திருக்கும் செல்பேசிக்கு வராமலே இருக்கும். ஆனாலும் இந்தியாவில் விற்கப்படும் செல்பேசிகளில் தொண்ணூற்றைந்து சதவீதம் ஆன்ட்ராய்ட் என்பதால் அதன் ஒவ்வொரு பதிப்பில் வரும் வசதிகளைப் பயனர்கள் அறிவது அவசியமாகிறது. அப்படி ஆன்ட்ராய்ட் 13 (இது சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது) மற்றும் 14 (இது தற்போது தான் உருவாக்கப்பட்டு வருகிறது) பதிப்புகளில் வரும் வசதிகளை பார்க்கலாம். 1️⃣செயலிகள் தனித்தனி மொழி பேசலாம் 2️⃣பிரதி எடுத்ததை மறந்துவிடு 3️⃣செயலிகளின் இரட்டை வேடம் 4️⃣படங்களை பகுத்தறிந்து பகிரலாம் 5️⃣பருத்துவிட்ட மென்பொருட்களை நீக்கவும் 6️⃣இரண்டு சிம்-கார்டில் சிறந்ததைப் பயன்படுத்தவும் தொடர்ந்து படிக்க மெட்ராஸ் பேப்பர் இதழை வாசிக்கவும்.

  • Articles,  தமிழ்

    செல் பேசுவது இருக்கட்டும், நீங்கள் பேசுங்கள்!

    குழந்தைகளுக்குச் செல்பேசியைக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும்? இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம் நடத்தினாலும், அவர்களைத் தனிப்பயிற்சி முடிந்தவுடன் கூட்டிவர, வீட்டுப்பாடம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க, விளையாட என்று அதற்கு ஆயிரம் அத்தியாவசியக் காரணங்கள் வந்துவிட்டன. அப்படிக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம். அப்படிக் கொடுக்கும் போது என்ன மாதிரிச் செயலிகள் இருக்க வேண்டும், செல்பேசியை எந்தளவு கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் பயன்பாட்டை எவ்வளவு கண்காணிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்கள் வாழும் சூழ்நிலை, வயது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்க. விண்டோஸ் கணினி ஆன்ட்ராய்ட் செல்பேசி ஆப்பிள் வாட்ச் பேசுங்கள் இன்றைய மெட்ராஸ் பேப்பர் வார இதழில் என் கட்டுரை.

  • Articles,  தமிழ்

    ஐபோன்+விண்டோஸ்: முஸ்தபா முஸ்தபா

    ஒவ்வொரு மென்பொருளையும் அதன் படைப்பாளர்கள் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஐபோனின் இயங்குதளமான ஐ-ஓஎஸ்ஸில் கடந்த சில வெளியீடுகளில் (அதாவது 16.4 வரை) வந்திருக்கும் முன்னேற்றங்களையும், ஐபோனை, விண்டோஸ் கணினியோடு இணைப்பதில் வந்திருக்கும் வசதிகளையும் இன்று வெளிவந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் பார்க்கலாம். மைக் ஐசலேஷன் புதிய உணர்வுருகள் போட்டோஸ் செயலியில் பிரதிகளைக் கண்டுபிடிக்கும் வசதி ஆப்பிள் மியூசிக் கரோக்கே தரவுகளுக்கான கூடுதல் பாதுகாப்பு பத்து நிமிடங்களுக்கு ஏர்-டிராப் புதிதாக வந்திருக்கும் செயலி ஃப்ரீஃபார்ம் ஐபோனும் விண்டோஸ் ஃபோன் லிங்க்கும்